1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சியா நகரில் இருந்து நேற்று முன்தினம் இரவு பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லொரி ஒன்று புறப்பட்டது.‌இந்த பெட்ரோல் டேங்கர் லொரி, மாலங்கா என்கிற நகருக்கு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிகெட்டு ஓடிய லாரி எதிர்திசையில் பால் ஏற்றி வந்த லொரி மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 லாரிகளும் சாலையில் கவிழ்ந்தன.

எரிபொருள் விலையை உயர்த்திய கமன்பிலவை வெளியேற்றுவோம். நிவாரணத்தை குறைத்து நாட்டை அழிக்கும் ஒடுக்குமுறை அரசாங்கத்தை விரட்டுவோம்." எனும் கருப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் இன்று (19.07.2021) காலை பாராளுமன்ற சுற்றுவட்ட வளாகத்தில் நடைபெற்றது.

மன்னார் மாவட்டத்தின் முதலாவது பெண் விமானியாகுவதற்கான முதல் கட்ட பயிற்சிகளை இமானுவேல் எவாஞ்சலின் நிறைவு செய்துள்ளார்.

தனக்கு இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கூறுகிறார்.

கொவிட் தடுப்பூசிகளுக்கான இலங்கையின் மருந்து கட்டுப்பாட்டு நிபுணர்கள் ஆலோசனை அமைப்பின் எட்டு உறுப்பினர்களில் மூன்று பேர் நேற்று பதவி விலகியுள்ளனர்.

ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடாத மக்கள் இன்று நாட்டில் உள்ளனர் என்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறுகிறார்.அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பதே தனது ஒரே நோக்கம் என்று நிதியமைச்சர் கூறியுள்ளதோடு, இந்த முயற்சிக்கு தனக்கு உதவுமாறு உள்ளூராட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படத்தை இணையதளத்தில் தரவிறக்கம் செய்து விற்பனை செய்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் நுவரெலியா பிரதேச புலனாய்வுப் பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

சீதுவ பகுதியில் பொலிஸ் எஸ்.டி.எஃப் இணைந்து மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் லலித் பிந்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து புதிய ‘குவாட்' கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக துமிந்த சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நியமனம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவியிருக்கும் கடிதம் குறித்து ஜனாதிபதி செயலகத்தின் சிரேஸ்ட அதிகாரி ஒருவரிடம் விசாரித்தபோது, ​​ஜனாதிபதி இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்ததை உறுதிப்படுத்தினார்.

எதிர்வரும் 2023ஆம் ஆண்டளவில் பலமிக்க ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் அமைக்கப்படும் என அந்த கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியில் தொடர்ந்தும் நீடிப்பதா, இல்லையா என்பது குறித்து எதிர்வரும் 21ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகளை வளைத்துப் போட, நிதியமைச்சரை மாற்றி, தூதுவர்களைச் சந்தித்துக் கோரிக்கை விடுப்பது மாத்திரம் போதாது என்று கூறியுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், இலங்கை அரசாங்கம் தனது,  "போலி தேசியவாத" கொள்கையை மாற்ற வேண்டும். இனவாதத்தைக் கைவிட்டு, தமிழ், முஸ்லிம்  மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா தற்போது மும்பையில் வசித்து வருகிறார், மிஷன் மஜ்னு படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.இதில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக நடிக்கிறார்.

கோட்டாபய - மஹிந்த அரசாங்கத்தின் அடக்கு முறை ஆட்சி மற்றும் பொருள் விலையேற்றம் என்பவற்றை கண்டித்து வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி