1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாட்டில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிரான விமர்சனங்கள் கடுமையாக உள்ளன கொரோனா வைரசை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்வதில் முன்னின்றது தேர்தலுக்கு நாட்களை எண்ணிக்கொண்டு இருந்ததால் இப்போது கொரோனா தொற்றியுள்ளது.

பல விதமான சமூகங்களின் பிறப்புரிமைகள் வித்தியாசமானவை சில மதப்பிரிவுகளின் படி மரணம் மீள் பிறப்பு என்பதை சில சமூகங்கள் நம்பி வருகின்றன சில மதச்சம்பிரதாயங்களின் படி இறந்த ஒருவரின் உடலுக்கு இறுதிக்கிரியைகள் செய்வதில்லை.

நாட்டில் கொரோனா வைரஸினால் இரண்டாவது மரணம் நிகழ்ந்த போது நான் பேசியது இனவாத அர்த்தத்திலோ அல்லது மற்ற இனங்களை கேவலப்படுத்துவதோ அல்ல என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மேலும்10 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (31) பிற்பகல் 3.20 மணி வரை இலங்கையில் மேலும் 7 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு பங்குச்சந்தை நாளை (01) முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வரையில் தொடர்ந்தும் மூடப்படும் இலங்கை பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

கொரோன வைரஸ் தாக்கம் கட்டுக்கடங்காமல் இறுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அரச இயந்திரம் அதிகூடிய பலனை பெற்றுத்தரும் ஒன்றாக மாற்றப்பட வேண்டும் என சமகி ஜன பலவேகய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில், இன்று முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் செல்ஃபி எடுத்து அரசாங்கத்திற்கு அனுப்ப வேண்டும் என அந்த மாநில அரசாங்கம் உத்தர விட்டுள்ளது.

களுபோவில போதனா வைத்தியசாலையில் கொரானா தொற்றுக்கு இலக்காகிய ஒருவர் நேற்று (31) அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்ட வாட்டு தொகுதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் குறித்த மாவட்டங்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதற்கமைய, கொரோனா தொற்றுக்குள்ளாகியோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சிகிச்சை பெற்றுவரும் தாய்லாந்து நாட்டவர்களுடன் தொடர்பில் இருந்த எட்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

கொவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் இறுதி கிரிகைகள் சர்வதேச தனிமைப்படுத்தல் முறைகளுக்கு அமையவே நடைபெறும் என சுகாதார சேவைகள் சிரேஷ்ட உத்தியோகத்தர் வைத்தியர் ஜெனரல் பபா பள்ளிஹவடன தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட ´கொன்டேக் ஸ்ரீலங்கா´ அதாவது இலங்கையை தொடர்பு கொள்ளுங்கள் என்ற இணையதளத்தின் மூலம் இதுவரை 17000 இலங்கையர்கள் தம்மை பதிவு செய்துக்கொண்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி