1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

 கடந்த ஏப்ரல் மாத இறுதியிலிருந்து இதுவரை கடவுச்சீட்டுக்காக அதிக கேள்வி நிலவுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனைத்து கட்சிகளின் செயலாளர்களையும் எதிர்வரும் 06ஆம் திகதி முன்னிலையாகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

369 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளை இன்று (01) முதல் அமலுக்கு வரும் வகையில் தளர்த்துவற்கு தீர்மானித்துள்ளதாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு அறிவித்துள்ளது

அதன்படி, மொத்தம் 369 எச்எஸ் குறியீடுகள், இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரம் இல்லாமல் ஜூன் 01ஆம் திகதி முதல் பொருட்களை இறக்குமதி செய்யமுடியும் என நிதிமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

சுங்க அனுமதியின் போது வரிகள் உட்பட பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இறக்குமதி செய்யப்படலாம் என்று குறிப்பிட்டுள்ள நிதியமைச்சு,
2022 ஜூன் 07 வரை திறந்த கணக்கு இறக்குமதியை அனுமதிக்க அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.  

நாட்டின் கடினமான பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு,
அனைத்து பங்குதாரர்களும் அத்தியாவசியப் பொருட்களின் தடையில்லா விநியோகத்தை உறுதி செய்வதற்கு, இறக்குமதியின் நோக்கத்துக்காக வரையறுக்கப்பட்ட அந்நிய செலாவணியை சேமிக்க முக்கியத்துவம் வழங்க வேண்டும் என நிதியமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
  
கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 369 அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 

அதற்கமைய கப்பல் ஏற்றுமதி ஒப்பந்தச் சீட்டு அல்லது விமான வழி சீட்டை சமர்ப்பித்து இறக்குமதி அல்லது ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரால் வழங்ப்படும் அனுமதிப்பத்திரத்தைப் பெறவேண்டும் என வரத்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

திராட்சைப் பழம், அப்பிள் உட்பட பழவகைகள், சொக்கலேட் உட்பட பால் உற்பத்திகள், நூடுல்ஸ் வகைகள், பழச்சாறுகள், தண்ணீர், பியர், வைன் வகைகள், சிகரெட்டுகள் மற்றும் சுருட்டு வகைகள் உட்பட புகையிலை உற்பத்திப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள், டயர்கள், செருப்பு மற்றும் சப்பாத்துகள், இலத்திரனியல் உபகரணங்கள், வாகனங்கள், விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக, தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருள்களை பகிர்ந்தளிப்பதில் அரசியல்வாதியொருவரின் அழுத்தம் அதிகரித்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் இவ்வாறு அழுத்தம் பிரயோகிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிவாரணப் பொருள்களை ஜீவன் தொண்டமான் குறிப்பிடும் நபர்களுக்கு வழங்குமாறு அழுத்தம் பிரயோகிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை ஜீவன் தொண்டமான் எம்.பியின் பிரத்தியேக செயலாளர் மறுத்துள்ளார். இவை அனைத்தும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்படுவார்கள் என கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பண்டாரகமை - அட்டுலுகம சிறுமியான ஆய்ஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பெறுமதி சேர் வரி (வற்) 8 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, அனைத்து உள்ளூர் மதுபானங்களின் விலைகளும் இன்று (01) முதல் அமலாகும் வகையில் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேல், சபரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி