1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சுமார் 90 நாட்களுக்கு பின்னர் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

” என் உயிரிலும் மேலான மக்கள் செல்வங்களை எனக்கு தந்துவிட்டே, எனது தந்தை விடைபெற்றுள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், எதிரணியில் இருந்தாலும் மக்களுக்கான எனது சேவைகள் தொடரும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சூரிய சக்தியின் ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக நுகர்வோருக்கு அனுமதியை வழங்குவதற்கும் அவசியமான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கும் அரசாங்கம் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு வீட்டினதும் தொழிற்சாலைகளினதும் கூரைகள் மீது இலகுவாக பொறுத்தக் கூடிய சூரிய சக்தி தகடுகள் உள்ளன.

இதனூடாக பகல் வேளையில் மின்சாரத்தை பெறமுடியுமாயின் தற்போது மின்னுற்பத்திகாக பயன்படுத்தப்படும் நீர் மற்றும் எரிபொருளை பயன்படுத்தி இரவு வேளையில் தடையின்றி மின்சாரம் வழங்க முடியும்.

இதற்கமைய 24 மணிநேரமும் துண்டிப்பின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடல் அமைதியின்மை சம்பவம் தொடர்பில் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இதுவரையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

தானும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை முழுமையாக ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு இன்று  அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
 

குறித்த வரைவில் உள்ள அனைத்து திருத்தங்களுக்கும் உடன்படுவதாகவும் மேலும் பல முன்மொழிவுகளும் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியினால் பராமரிக்கப்படும் சேதமடைந்த நாணயத்தாள் மாற்றும் கருமபீடம் புதன்கிழமைகளில் மட்டும் திறந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஆடைத் தொழிற்துறையில், இந்த ஆண்டில், 6 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டுவதற்கான இலக்கை எட்டக்கூடியதாக இருக்கும் என ஒன்றிணைந்த ஆடைத்தொழிற்துறை சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி