1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஐக்கிய மக்கள் சக்தி உட்பட

அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக அறிவிக்கப்பட்ட 25 பாராளுமன்ற உறுப்பினர்களை அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தொடர்பு கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த வாரம் ஜனாதிபதிக்கு மீண்டும் அறிவித்திருந்தது.

அவ்வாறு தொடர்பு கொள்ள முடியாத பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தனி வேட்பாளர் ஒருவர் முன்வைக்கப்படுவார் என்றும் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த பலருடன் கடந்த வாரம் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளதாக அக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
 
பொதுஜன முன்னணியில் இருந்து தனி வேட்பாளர் ஒருவரை நிறுத்துமாறு அந்த கட்சியின் தலைமைக்கு அடிமட்ட மட்டத்தில் இருந்து தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
 
இதேவேளை, ஆரம்பம் முதலே அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்து வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு ஒன்று சேர்வதை மேலும் தாமதப்படுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி