1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கையின் பிரஜை இல்லை எ

தெரிந்தும் சுமார் 4 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராகவும் இராஜாங்க அமைச்சராகவும் கடமையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பொதுப் பணம் மற்றும் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. .

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, நாடாளுமன்ற உறுப்பினராகவும் இராஜாங்க அமைச்சராகவும் கடமையாற்றிய போது, ​​பொதுப் பணம் மற்றும் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்து, இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 
 
இலங்கையின் பிரஜை அல்ல என்பதை அறிந்து பாராளுமன்ற உறுப்பினராகவும், இராஜாங்க அமைச்சராகவும் செயற்பட்டு பொதுப் பணம் மற்றும் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்தி பணத்தை மீளப் பெற்றுத்தருமாறு 'ஊழல் மற்றும் வீண்விரயத்துக்கு எதிரான குடியுரிமை' அமைப்பின் தலைவர் கமந்த துஷார கோரிக்கை விடுத்துள்ளார். 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி