1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எமது நாட்டிற்கு ஸ்மார்ட் தலைமுறையே தேவை.

மக்கள் ஸ்மார்ட்டாக நடந்து கொள்ளவில்லை என்றால், ஆட்சியாளர்கள் எந்த நேரத்திலும் மக்களை முட்டாளாக்கலாம். நமது நாடு வங்குரோத்து நிலையில் இருந்து வெளியே வந்துள்ளதாக அரசு கூறுகிறது. சர்வதேச சமூகத்தின் நம்பகத்தன்மைக்கு ஏற்பவே வங்குரோத்து நிலையில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படுகிறது. சர்வதேச நிதி குறிகாட்டிகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனங்களே இதனை ஆராய்ந்து தரவரிசைப்படுத்தல்களை வெளியிட்டு வரும். இதைவிடுத்து வங்குரோத்து நிலையில் இருந்து வெளியே வந்ததாக நாமாகவே கூறுவது தவறு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டு இந்த தரவரிசை குறித்து நான் பேசியபோது, ​​அதனை கோலிக்குள்ளாக்கினர். இந்த தரவரிசையில் ஏற்பட்ட சரிவு நாட்டுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நான் கூறிய போது, ​​பாராளுமன்றத்தில் “ஹூ”ச் சத்தமே ஏற்பட்டது. இது குறித்து எதுவும் தெரியாமல் அடிமைகள் போல் நடந்து கொண்டனர். இத்தகையவர்களுக்கு மூளை இல்லாவிட்டாலும், நாட்டின் 220 இலட்சம் மக்களும் புத்திசாலித்தமான நடந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 274 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான  ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கண்டி, கங்கவடகோரலை, லும்பினி ரோயல் கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூன் 30 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதன்போது, பாடசாலை நடனக் குழுவிற்கு ஆடைகளை கொள்வனவு செய்வதற்காக பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது. 

இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் அரசாங்கம் இணக்கப்பாட்டைச் செய்து வங்குரோத்து நிலையிலிருந்து வெளியேறிவிட்டோம் என்று பொய்யைக் கூறி வருகின்றனர். அரசாங்கம் இன்னும் சர்வதேச பிணை முறி பத்திரதாரர்களுடன் உடன்பாட்டை எட்டவில்லை. இந்த வங்குரோத்து நாட்டில் கூட கீழ்ந்தரமான கூட அரசியல் தந்திரங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் போது, கானாவின் நிதி அமைச்சரே பிணைமுறி பத்திரதாரர்களைச் சந்திக்கச் சென்று, கானாவின் மொத்த வெளிநாட்டுக் கடனில் 37% வெட்டைப் பெற்றார். சேர்ந்த வட்டியில் 37% குறைக்கப்பட்டுள்ளது. எமது நாட்டில் சேர்ந்த வட்டிக்கு 4% வட்டி செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

நாட்டுக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் போது, ​​இத்தகைய முடிவுகளை எடுக்கும்போது, இந்நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு இத்துறைசார் அறிவு இருக்க வேண்டும். அதிக புத்திசாலித்தனம் இருக்க வேண்டும். அவர்களின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் இலக்குகளை நிறைவேற்றும் நோக்கத்திற்காக, நாட்டின் 220 இலட்சம் மக்களை ஆபத்தில் ஆழ்த்துவதும், இதுபோன்ற பாதகமான இணக்கப்பாடுகளில் ஈடுபடுவதும் காலத்தின் துயர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி