1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

போதைப்பொருள் கடத்தல்

மூலம் பணம் சம்பாதித்தார் என சந்தேகிக்கப்படும்  பொத்தப்பிட்டிய மெனிக்திவல  பிரதேசத்தில் வசிக்கும் இராணுவ கொமாண்டோ ஒருவரை கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஆடம்பரமான முறையில் புனரமைக்கப்பட்ட முச்சக்கரவண்டியும், சுமார் 20 இலட்சம் பெறுமதியான மூன்று மோட்டார் சைக்கிள்களும் அவருக்கு உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
கொமாண்டோ வீரருக்குச் சொந்தமான சுமார் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான வீடு மற்றும் உடைமைகள் எவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டது என்பது தொடர்பிலும் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
போதைப்பொருள் குற்றச்சாட்டில் குறித்த கமாண்டோ சிப்பாய் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு எதிராக உயர் நீதிமன்றங்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் பல இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி