1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஊடகவியளாளர் லசந்த விக்கிரமதுங்கவிற்கு நடந்ததுபோல் நடக்க இடமளிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அவரின் வாழ்க்கைக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்."முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பலவீனமாக உள்ளது. அவரின் வீட்டிற்கு அடிக்கடி சந்தேகத்திற்கிடமான நபர்கள் சென்று வருவதாக அறியக்கிடைக்கின்றது. இதற்கான விசாரணை ஒழுங்காக மேற்கொள்ளப்படவில்லை என்று குமார வெல்கம நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் வீட்டிற்குள் ஜனவரி 21, 2021 இனம்தெரியோதோர் நுழைந்துள்ளனர்.ஆனால் அவர்கள் வீட்டிலுள்ள எந்த விதமான மதிப்புமிக்க பொருட்களையும்  எடுத்துச் செல்ல வில்லை வெறு​மனே வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றார்கள்.

தங்கள் கடமைகளை செய்வதாக கூறி பொலிஸார் கைரேகை அடையாளத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

இருப்பினும், 9 வாரங்கள் கடந்த நிலையிலும் பொலிசார் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை.

விசாரணையில் முடிவுகள் எதுவும் இல்லை என்று பொலிஸ் மா அதிபரை சந்தித்து தெரிவித்துள்ளனர்

பொலிஸ் மா அதிபர் பொலிஸில் பல பொலிஸ் அதிகாரிகளை அழைத்துபேசியுள்ளார் ஆனால் இது வரைக்கும் பதில் கிடைக்கவில்லை

இதில் ஒரு ஆபத்தான விடயம் உள்ளது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து நடந்த தவறுகளை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளனர்.

அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் அவர்களின் பார்வையில் எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இல்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக, முன்னாள் ஜனாதிபதி அச்சுறுத்தப்படுவதை நாம் காண்கிறோம்.

அவர் கடந்த 10 ம் திகதி முறைப்பாடொன்றை பதிவுசெய்ய பொலிஸ் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சிற்கும் சென்றுள்ளார்.இந்த நாட்டிற்கு நானும்  தலைமைத்துவம் வழங்கியுள்ள படியால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்பதை உணர்கின்றேன். ஆகவே இதற்கான விரிவான விசாரணை ஒன்று தேவை என்பதை அவர் அங்கு தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி