1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சிறீ லங்கா சுதந்திரக் கட்சி (எஸ்.எல்.எஃப்.பி) யை புதுப்பிக்க அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன நாடு முழுவதும் பரந்த வேளைத்திட்டத்தை தொடங்கியுள்ளார். அதன் முக்கிய நிகழ்வு இன்று (மார்ச் 30) ​​கண்டியில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

அதன்படி சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இன்று (30) காலை தலதா மாளிகைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட  தலைவர்களிடம் ஆசியும் பெற்றுக்கொண்டனர்.

வீர கெப்பெட்டிபொலவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீ.ல.சு.க. அதிகாரிகள் கெடம்பே ராஜிதாபவனராமயாவுக்கு மரியாதை செலுத்திய பின்னர் மாதேலில் நடைபெறும் பயிற்சி பட்டறையில் கலந்து கொள்வார்கள் இது இன்றும் நாளையும் நடைபெறும்.

வரவிருக்கும் மாகாண சபை தேர்தல்களில் 'கை' சின்னத்தின் கீழ் போட்டியிட SLFP ஏற்கனவே முடிவு செய்துள்ளது.

இரட்டை பிராஜா உரிமை பெற்றவர்கள் வேண்டாம்!

இதற்கிடையில், 'அனித்தா' வார இறுதி தேசிய செய்தித்தாளுக்கு கருத்து தெரிவித்த எஸ்.எல்.எஃப்.பி மத்திய குழு உறுப்பினர், இரட்டை குடியுரிமை உள்ளவர்களுக்கு எந்தவொரு முக்கிய அரசாங்க பதவியையும் வழங்கக் கூடாது போன்ற கோரிக்கைகள் உட்பட புதிய அரசியலமைப்பிற்கான திட்டங்கள் வரைவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரனி ரொமேஷ் டி சில்வாவின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவிடம் இப்பொருப்பு ஒப்படைக்கப்படவுள்ளது.

இரட்டை குடிமக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர், அத்துடன் அரசு நிறுவனங்கள் மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர் உள்ளிட்ட எந்த பதவிகளும் வழங்கப்படக்கூடாது என்று ஸ்ரீ.ல.சு.க. தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளது.

நாட்டின் அனைத்து தரப்பினரும் நிறைவேற்று ஜனாதிபதி பதவி பற்றி விவாதித்து பெரும்பான்மையினரின் ஒப்புதலுடன் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்ற தேர்தல் முறையை கலப்பு தேர்தல் முறையாக மாற்றுவது மற்றும் அதிகாரப் பகிர்வை உறுதி செய்வதையும் அந்த அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளது.

எஸ்.எல்.எஃப்.பியின் சிரேஸ்ட துணைத் தலைவர் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தலைமையில் 2020 ஆகஸ்டில் இந்த குழு நியமிக்கப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி