கொவிட் 19 காரணமாக உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் தொடர்பில் தாமதமின்றி இறுதி முடிவை எடுப்பது அவசியமானதாகும்! தமிழ்தேசிய கூட்டமைப்பு
முஸ்லீம் மக்களிற்கு தங்கள் மத கொள்கைகள் அடிப்படையில் உடல்களை அகற்றுவதற்கு உள்ள உரிமையை மறுப்பது, அடிப்படை உரிமையை மறுக்கும் செயல் என தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.