1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பொலிஸார் உள்ளிட்ட அரச பாதுகாப்பு அமைப்புகளால் கொடூரமாக சித்திரவதை செய்யப்படுவதால் ஏராளமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வரும் இலங்கையில் சித்திரவதைக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.

உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பரவியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது தீயைக் கட்டுப்படுத்த 9 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை சந்தித்து கலந்தாலோசிக்க அவரது சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தனது வீட்டுக்குச் செல்வதற்குப் பாதையொன்று இன்மையால் மாத்தறை நகர சபைக்கு முன்னால் அமைந்துள்ள மின் கம்பத்தில் ஏறி நபரொருவர் நேற்று காலை எதிர்ப்புப் போராட்டமொன்றை நடத்தினார்.

கொரோனா பாணி ஒரு உளவியல் நடவடிக்கை என்று சமூக மற்றும் அரசியல் ஆய்வாளர் தீப்தி குமார குணரத்ன கூறுகிறார்.
தீப்தி இதை 'voicetube.lk' க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின், அரசியல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பாடசாலை மாணவர்களை பயன்படுத்தியமைக் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.

பொரளை கனத்தையில் கட்டப்பட்ட கபன் சீலைகள்,வெள்ளைத் துணிகள் என்பவை பொலீஸாரால் அகற்றப்பட்டிருக்கின்றன.மா நகரசபை முதல்வர் அகற்ற வேண்டாம் என்று கூறியும் அகற்றப்பட்டிருகின்றன.மீண்டும் கட்டப்போவதாக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகம் முழுவதும் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில், யூடியூப் உள்ளிட்ட அதன் பிற சேவைகள் திடீரென்று திங்கட்கிழமை மாலையில் முடங்கின. சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக இந்த நிலை தொடர்ந்த வேளையில், #GoogleDown #YouTubeDOWN என்ற ஹேஷ்டேக்குகள் சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகின்றன. எனினும் கூகுள் மின்னஞ்சல் சேவை 15 நிமிடங்களுக்குப் பிறகு இயங்கத் தொடங்கின.

இலங்கையை தவிர அனைத்து நாடுகளும் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு அனுமதித்துள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனாரட்ன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான தடையை எதிர்த்து இன்று (13) மாலை 5.00 மணிக்கு அரசுக்கு எதிராக பொரெல்ல கனத்தை மைதானத்திற்கு முன் அமைதியான போராட்டம் இடம் பெற்றுள்ளது.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு பதில் வருமானத்தை உழைப்பதிலேயே அரசாங்கம் ஆர்வமாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.

வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு கூட்டணி எப்படி அமையும் என்ற கேள்விக்கு, விஜயகாந்த், கமலஹாசன் ஆகியோரது கட்சிகளின் நிலைப்பாடு இரண்டு வெவ்வேறு நிகழ்ச்சிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளிப்பட்டது.

சமகால அரசியல் நிலைமைகள்,முஸ்லிகளின் உடல்களை தகனம் செய்வது தொடர்பில் எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பில் கலந்துரையாட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு இன்று நடைபெறுகிறது என, பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம், ஹரிஸ் தெரிவித்தார்.

யானை - மனித மோதலால் உலகில் அதிக எண்ணிக்கையிலான யானைகள் இறக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது என்பது பொதுக் கணக்குகள் பற்றிய குழுவின் கூட்டத்தில் (கோபா) தெரியவந்துள்ளது. யானை – மனித மோதலால் அதிகளவான மனித உயிரிழப்புக்கள் இடம்பெறும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் காணப்படும் நிலையில், முதலாவதிடத்தில் இந்தியா காணப்படுகிறது.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அப்பதவியில் இருந்தும் கட்சி உறுப்புரிமையில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார் அத்துடன் கட்சியின் மேலும் சில உறுப்பினர்களும் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி