1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாடுபூராவும் அமுல்படுத்தியுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் திருத்தி, எதிர்வரும் வாரத்திலிருந்து 21 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படுமென அரசாங்க தகவல்கள் கூறுகின்றன. கொரோனா வைரஸ் காரணமாக மிகவும் ஆபத்தான மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.

கொரோனா தொற்றுநோய்க்கு முன்னர், மீன் மற்றும் உலர்ந்த மீன்கள் திருகோணமலையிலிருந்து  நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டன, ஆனால் இப்போது இரண்டும் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

கொரோனா தொற்று ஏற்பட்ட முதல் நோயாளி முதல் அனைத்து  நோயாளிகளுக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ளும் வரை  நாட்டின் பொருளாதாரம் சம்பந்தமான எந்த தீர்மானகரமான முடிவையும் எடுக்க வேண்டாம் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA)  தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் தேர்தலை நடத்த வேண்டாம் என்று கார்டினல் மல்கம் ரஞ்சித் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு குடும்ப அதிகாரத்தை பலப்படுத்துவதற்கு 'கொவிட் 19 வைரசை அரசாங்கம் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நாட்டில் ஆடைத் தொழில் குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று 'சமகி ஜன பலவேகய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார்.

உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ள கொரோனா வைரஸ், தொடர்ந்து அதிகமான உயிர்களை பலி எடுத்து வருகிறது. இச்சந்தர்ப்பத்தில் பல்கலைக்கழகங்களையும் பாடசாலைகளையும் திறக்க அரசாங்கம் திடீரென எடுத்த முடிவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கொரோனா தொற்றினால் இறந்த உடல்களை பயங்கரவாதிகள் உயிரியல் ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்று இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்று நோய் ஒழிப்பதில் உலகளாவிய நாடுகளில் இலங்கை ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ 9 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

கொரோனா தொற்று  நோயால் இறக்கும் மக்களின் உடல்களை தகனம் செய்வதற்கான சுகாதார அமைச்சின் முடிவை மீள் மறுபரிசீலனை செய்வதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது

எனது சகோதரர் ரியாஜ் பதியுதீன் நேற்று அவர் வீட்டில் இருந்த போது படையினர் அங்கு சென்று   ஏப்ரல் 21 ம் திகதி நடந்த குண்டு வெடிப்பின் போது அவர் சம்பந்தப்பட்டதாக கூறி அவரைக் கைது செய்ததாக ஊடகங்களின் மூலம் தெரியப்படுத்தினார்கள்.

இலங்கையில் கொரோனா வைரசால் அதிக ஆபத்து இருக்கின்ற நிலையில், அரசாங்கத்தின் பலம்வாய்ந்த அரசியல்வாதிகள் சார்பாக அவசர பொதுத் தேர்தல் நாட்டிற்கும் மக்களுக்கும் ஒரு மரண தண்டனை என்று முன்னால் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

'' தற்போதைய 'தற்காலிக அரசு' அரசியலமைப்பையும் நாட்டின் சட்டங்களையும் மீறுகிறது.இந்த மசோதா கடுமையான குற்றச்சாட்டுகளையும் மேற்கோளிட்டுள்ளது. ஆனால் அவற்றை யாரும் கேட்க முடியாது.

புத்தளம் பகுதியில் சி.ஐ.டி நடத்திய சோதனையின் போது முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஸ் பதியுதீன் உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று 14 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி