1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 
Feature

வலதுசாரி தீவிரவாதத்திற்குள் செல்லாமல் மூன்றாவது பரிமாணத்தில், அரசியலில் மூன்றாவது பாதையில், அதாவது புதிய பாதையில் அரசியல் பயணத்தை ஆரம்பித்து அதிகாரத்தை பிரயோகிக்கும் நோக்கத்தில் மக்கள் செயற்படுகின்றனர் என்பதை முன்னிலை சோசலிச கட்சி வலியுறுத்துகிறது.

"நாம் சிறிய தவறு ஒன்றை செய்தால் அதை வைத்து எம்மை சிக்க வைக்கவே ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால், நாம் பல காலங்களுக்கு முன்னாலேயே 'மன்னிக்கவும், நாங்கள் அந்த வலைக்குள் சிக்க மாட்டோம்' என்று தெரிவித்து விட்டோம். நாம் மக்களை நிர்வகிக்கின்றோம். தேர்தலுக்கு மத்தியிலும் போராட்டங்களுக்காக மக்களுடன் முன் வருகிறோம். பாராளுமன்றத்துக்குள் போராட்டங்களை நடத்தவும் நாங்கள் தயங்க மாட்டோம்" என்று முன்னிலை சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குனரட்டினம் தெரிவித்துள்ளார்.

'மாளிகைகளை கதிகலங்க செய்த போராட்டங்கள்' என்ற தொனிப் பொருளிலான நூல் வெளியீட்டு விழா கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று (ஜூலை 18) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், "இந்த நூல் பக்க சார்பானது. மக்களுக்கானது. அதேபோன்று போராட்டங்களை முன்னெடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்கு சார்பானது" என்றார்.

"கடந்தாண்டு இடம்பெற்ற போராட்டத்தின் பங்காளர்களாக நாமும் இருந்தோம். பல்வேறு கட்சிகள் அரசியல் குழுக்கள் நபர்களின் ஒன்று திரட்டல்கள் தனிமனித பங்களிப்பு என மாபெரும் மக்கள் கூட்டம் கலந்து கொண்ட போராட்டமாகவே அது காணப்பட்டது.

"இந்தப் போராட்டத்தின் போது தனிப்பட்ட ரீதியில் காணப்பட்ட பல்வேறு சவால்கள் எச்சரிக்கைகள் அச்சுறுத்தல்கள் போன்றவற்றையெல்லாம் மறந்து பாரிய அர்ப்பணிப்புடன் போராட்டத்தில் கலந்துகொண்டு உயிர் தியாகங்களை செய்தவர்களும் இருந்தனர். அவ்வாறானவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. அதேபோன்று போராட்டங்களின் எதிர்காலம் எவ்வாறு அமையப் போகின்றது, எதிர்கொள்ள உள்ள சவால்கள் என்ன? அதற்காக நாம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பான விளக்கங்களும் இந்த நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன" என்று குமார் குணரட்ணம் மேலும் தெரிவித்தார்.

Feature

பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கை தற்போது முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் பாராட்டுக்குரியது என

Feature

எமது நாட்டில் 17 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் இருப்பதாகவும், அவர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதில் காலாவதியான

Feature

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தமிழ் அரசியல் தரப்பினருக்கு நல்லதொரு பதிலை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளர் அமைச்சர்

Feature

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை வலுவூட்டவும், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் ஜனாதிபதி ரணில்

Feature

பிணக்குகளைத் தீர்ப்பதற்காக எல்லா சந்தர்ப்பங்களிலும் வழக்குத் தொடரும் நடைமுறையினைத் தவிர்த்து, பிணக்குகளைத்

Feature

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு

Feature

அம்பலாந்தோட்டை - கொக்கல்ல பிரதேசத்தில் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்

Feature

இந்த வருடம் அரிசி, பாசிப்பயறு, உழுந்து , குரக்கன், கௌபி, மற்றும் நிலக்கடலை போன்றவற்றை இலங்கைக்கு இறக்குமதி செய்யத்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி