1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மங்கள சமரவீரன் உயிரிழந்து ஆகஸ்ட் 24 ஆம் திகதியுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது.


இதனையொட்டி ஆகஸ்ட் 24ஆம் திகதி பொல்கொட இல்லத்தில் விஷேட ஆராதனையும்இ 25ஆம் திகதி மகா சங்கரத்தினம் எனும் தலைப்பில் விசேட சமய நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பின்னர்இ ஆகஸ்ட் 26ஆம் திகதி மாலை 03 மணிக்கு மாத்தறை நுபேவில் உள்ள பழைய டச்சு வர்த்தக மையத்தில் மங்களவின் நினைவு நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பேராசிரியர் ரொஹான் சமரஜீவஇ ஷெஹான் மாலக ஆகியோரின் உரையும் இடம்பெறவுள்ளது. இதனை சமூக செயற்பாட்டாளர் ரந்துல டி சில்வா நெறிப்படுத்தப்படும்.

மேலும்இ அனுஷ்கா உதானா (வஸ்தி தயாரிப்பு) ஆகியோரின் நிகழ்வொன்றும் இடம்பெறவுள்ளது.

மலையக சிறுவர்களை பணிக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும் எனவும் இந்த விடயம் தொடர்பில் பெற்றோர் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஸ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

முட்டையொன்றின் விற்பனை விலையை குறைப்பதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் விதம் குறித்து தாம் கவலையடைவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகமாக இருக்கும் முதல் 5 நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஹஷாந்த குணதிலக்க மற்றும் கல்வல சிறிதம்ம தேரர் ஆகியோரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுமதி கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (சிபெட்கோ) தொழிற்சங்கங்கள், இன்று (22) எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வர்த்தக அமைச்சருடன் இன்றைய தினம் (22)  கலந்துரையாடவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் இருவரை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பட்சத்தில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் (TID) ஒப்படைக்குமாறு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

நாட்டில் நாளைய தினம்(22) 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி