1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாட்டின் தற்போதைய அரசாங்கம் தனது ஐந்தாண்டு பதவிக் காலம் முடியும் முன்னர் கவிழந்து விடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர பிரிதர்ஷன யாப்பா அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாத சாணக்கியன் எம்.பி மக்களை ஏமாற்றுவதற்காக வடகிழக்கு இணைந்த முதலமைச்சர் சொல்கின்ற ஒரு விடயத்தை தெரிவித்து தொடர்ந்து ஏமாற்ற மக்கள் ஏமாளிகள் அல்லர் என என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தாதியர் சபைக்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கான புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த 11ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 32 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெற்றதுடன், முருத்தெட்டுவே ஆனந்த தேரர் பிரதிநதித்துவம் செய்த பொதுச் சேவை ஐக்கிய தாதியர் சங்கம் மற்றும் சமன் ரத்னப்பிரியவின் அரச தாதியர் சங்கம் ஆகியவற்றை தோற்கடித்தது. ஜே.வி.பி பிரதிநிதித்துவம் செய்யும் தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை தாதியர் சங்கம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்தோனேஷியாவை அண்மித்த கடலில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

கண்டி – குண்டசாலை பகுதியில் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவர் உள்ளிட்ட உறவினர்களால், சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தலைமன்னார் மேற்கு பகுதியில், இன்று (13) காலை, வன வளத் திணைக்களத்தினரின் காணி அளவிடும் நடவடிக்கைகளுக்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட ஒரு சில கட்சிகளை ஒதுக்கி வைத்துவிடடு, தமிழ் பேசும் கட்சிகளின் ஒருமித்த தீர்மானம் என்று ஊடகங்கள் முடிசூட்டுவதை தயவு செய்து நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழர் விடுதலைக்கூட்டணி தெரிவித்துள்ளது. ஊடக அறிக்கை ஊடாக குறித்த விடயத்தினை குறிப்பிட்டு தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகத்தினால் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனை பகிரங்க விவாதத்திற்கு அழைப்பதாக,  முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் சவால் விடுத்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி காலை 10 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தை ஒத்திவைக்க விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கம் தகவல் அறியும் சட்டத்தை செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது என கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, (Maithripala Srisena) இது மிகவும் வேதனையான சம்பவம் எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமை தினத்தினை முன்னிட்டு திருகோணமலையில் அரச சார்பற்ற அமைப்புகளின் ஏற்பாட்டில் வாகன பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.

எரிவாயு வெடிப்பினால் ஏற்பட்ட சேதங்களுக்கு லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக அடுத்த சில நாட்களில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் அனுமதி என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி