1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கை நாடாளுமன்றத்தில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு நாள் கூட நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

தற்போதைய நிலையில் சொய்சா மகளிர் வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான 70 குழந்தைகள் பிறந்துள்ளதாக புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நளின் கமஹெதிகே தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சிறந்த  நாடகம் ஆடுகிறது என்று விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.

யாழில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள் காணப்படுவதனால், பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பைசர் (Pfizer)  கொரோனா தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்த ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

மஹரகம நகரசபையில் நேற்றைய தினம் இடம்பெற்ற  கைகலப்புச் சம்பவத்துடன்  தொடர்புடைய நகரசபை உறுப்பினர் நிஷாந்த விமலசந்திர கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகரில் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையை கையாள்வதற்காக அமைக்கப்பட்ட யாழ்ப்பாண மாநகர காவல் படையின் உத்தியோகத்தர்கள் ஐந்து பேரையும் வாக்குமூலம் வழங்க வருமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அழைத்துள்ளார்.

நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதோ, அதிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதோ அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. மாறாக துறைமுகநகரத்தை இலங்கை சட்டத்திற்குள் அடங்காதவாறு எவ்வாறு சீனாவிற்கு வழங்குவது என்பதிலேயே கவனம் செலுத்தியுள்ளது என்று உலபனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் 23-வது முதல் அமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார்.சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கவர்ணர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். 

கொரோனா தொற்றுநோயிலிருந்து கைதிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, இலங்கையில் சிறைக் கைதிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் முன்னணி அமைப்புகளில் ஒன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம்  கோரிக்கை விடுத்துள்ளது.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி