1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் 17 ஆவது நாளாகவும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான அவர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் தொடர்ந்தும் வைத்திருக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கும் நோக்கில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் கோரிக்கை குறித்து இலங்கை அதிகாரிகளுடன்  கடன் வழங்கும் திட்டத்திற்கான "பயனுள்ள தொழில்நுட்ப கலந்துரையாடல்களை" நடத்தியதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வலுப்படுத்துவதற்குத் தேவையான ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கு மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்குமாறு, நாட்டில் உள்ள எட்டு முன்னணி வர்த்தக நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளன.

இடைக்கால அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்ட வேண்டுமாயின் அது என் தலைமையிலேயே ஸ்தாபிக்கப்படும். பிறிதொரு தரப்பினரை பிரதமராக்க பெரும்பாலான எம்.பிக்கள் தயாரில்லை.

நாட்டின் உள்ளே பாரிய மக்கள் போராட்டம் ஒன்று ஏற்பட்டு இருக்கின்றது. அதனை யாரும் மறுக்க முடியாத அளவு எழுச்சி பெற்ற இளைஞர் போராட்டமாகும்.


காலி முகத்திடலுக்கு சென்று உணவு உட்கொள்ள மக்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வு காணாவிடின் நாமும் உணவுக்காக காலி முகத்திடலுக்கு சென்று நேரிடும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையில் தெரிவித்தார்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அப்பாவி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் பதவி விலகுமாறு முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் கோரியுள்ளார்.

அரசிலிருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்பட்டு வரும் எம்.பிக்கள் குழுவின் 41 உறுப்பினர்கள் அரசியலமைப்பு 21ஆவது திருத்தம் தொடர்பான யோசனைகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று கையளித்துள்ளனர்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி