1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் இலங்கை கடற்படையினரை தவிர்த்து துணை இராணுவப் படையினரை ஈடுபடுத்துமாறு இந்தியா, இலங்கையிடம் கோரியுள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று தமிழ் தரப்பு பிரதிநிதிகளை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் கூறுவதைப்போன்று அமைச்சரவையை குறைப்பதற்கு முன்னுதாரணமாக செயற்படுமானால் தாமும் அதற்கு முன்னுதாரணமாக அமைச்சுப் பதவியிலிருந்து விலகத் தயார் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தவறுகளை திருத்திக்கொண்டு மக்களாணைக்கு மதிப்பளித்து செயற்படாவிடின் நாமும் அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கிறங்க நேரிடும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். 

'இலக்கை விரைவில் அடைவோம்' -   என கண்டி மண்ணில் விமல் சபதம்!

" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான 'மொட்டு' அரசின் சாதாரண பெரும்பான்மையும் (113 ஆசனங்கள்) விரைவில் இல்லாது செய்யப்பட்டு - இந்த ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்." இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டவருமான விமல் வீரவன்ச நேற்று (24.03.2022) சூளுரைத்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாக உடனடியாக செய்யக்கூடிய நான்கு விடயங்கள் சம்பந்தமாக  இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. 

 

கடந்த காலங்களில் தெரிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு ஜனாதிபதியும் தமக்கு முன்னைய ஜனாதிபதியை விடவும் ஊழல், வினைத்திறன் மற்றும் திறமையற்றவர்களாகவே இருந்ததாக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இனி வரும் எதிர்காலத்தில், இந்திய மற்றும் தமிழக அரசியல், சமூக, பரப்புகளில் இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் அதிக கவனத்தை பெற வேண்டும் எனவும், அதற்கான ஒத்துழைப்புகளை இந்த அரசு சார்பில்  இந்திய தூதகரம் வழங்கும் என இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

 

'பிரகாசமான எதிர்காலம்' மற்றும் 'தேசிய ஒற்றுமை - தேசியக் கொள்கை உருவாகட்டும்' என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய கட்சி இன்று கொழும்பில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபடவுள்ளது.

இந்த போராட்ட 3 மணியளவில் நான்கு வழிகளிலிருந்து வந்து ஹைட்பாக் மைதானத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

அனைவரும் வெள்ளை ஆடையணிந்து மெழுவர்த்தி ஏற்றி இவ்வாறு சத்தியாக்கிரகத்தில் ஈடுபடவுள்ளனர்.

அதற்கமைய கொழும்பு டார்லி வீதி, விகாரமஹாதேவி பூங்கா, கொம்பனி தெரு மற்றும் பேப்ருக் பிளேஸ் ஆகிய நான்கு பகுதிகளிலும் இருந்து மக்கள் பேரணியாக வருகை தந்து ஹைட்பார்க் மைதானத்தில் ஒன்றுகூடவுள்ளனர்.

மக்கள் பேரணி ஹைட்பார்க் மைதானத்தில் ஒன்று கூடிய பின்னர் , ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாலை 4.30 மணியளவில் சத்தியாக்கிரகம் ஆரம்பமாகி 5.30 மணியளவில் நிறைவடையவுள்ளது.

இந்த சத்தியாக்கிரகத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொள்வர் என்று ஐ.தே.க. எதிர்பார்த்துள்ளது.

நாடு கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளமைக்கு தற்போதைய அரங்கமே காரணம் என கண்டனம் வெளியிட்டும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன கடந்த வாரம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தோடு, தேசிய மக்கள் சக்தி நுகேகொடையில் இவ்வாறான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தது.

எவ்வாறிருப்பினும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதை விடுத்து நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்ப்பதற்காக நீண்ட கால தேசிய கொள்கையொன்று எட்டப்பட வேண்டும் என்பதையும் , நாட்டுக்கு பிரகாசமான எதிர்காலம் உருவாக வேண்டும் என்பதையும் வலியுறுத்தி ஐக்கிய தேசிய கட்சி; இவ்வாறு சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 புலம்பெயர் தமிழ் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி