1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஊழல் குற்றச்சாட்டை மறைக்கவே, சுமந்திரன் வயலை உழத் தொடங்கினார் எனத் தெரிவித்த தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார், அதன் பின்னர் படகோட்டம் மற்றும் உரத்தைப் பற்றி பேசுகிறார் எனவும் கூறினார்.

சீனிக்கான தட்டுப்பாடை உருவாக்கி அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையையும் மீறி கடைகளில் சீனி விற்கப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் (Passport) எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.ஒரு நாள் சேவையின் கீழ் சேவையை பெறுவோரின் எண்ணிக்கை 500 ஆல் அதிகரித்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கெரவலபிட்டிய, யுகதனவி மின் நிலையத்திற்குரிய 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கும் அமைச்சரவைத் தீர்மானத்தை நிறுத்த உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது எல்லே குணவன்ச தேரர் மற்றும் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனது மகனை திட்டமிட்டு கொலை செய்து விட்டு எங்களை தற்போது அலைய விடுகின்றனர் என,  இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின்(Viyalendran) வீட்டின் முன்னால் அவரது மெய்பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்ட பாலசுந்தரத்தின் தாயார் தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வெளியான செய்தி குறித்து ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) கூறுகையில்,அந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளதாக அக்கட்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தஹாம் சிறிசேன, பொலன்னறுவை தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இளைஞர் கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தஹாம் சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகனாவார்.

தமிழ்நாடு அதிரடிப்படையால் `சந்தனக் கடத்தல்' வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. ` காடுகள் மற்றும் அவற்றையொட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு அரசின் திட்டங்கள் சரியாகக் கொண்டு செல்லப்படாததால்தான் வீரப்பன் என்ற நபர் உருவானார். தற்போதும் அதே சூழலில்தான் பழங்குடிகள் வசிக்கின்றனர்' என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பெ.சிவசுப்ரமணியம். என்ன நடக்கிறது மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில்?

கடந்த ஒகஸ்ட் 3ம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமையால் எவ்வித குற்றச்சாட்டுமின்றி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கோஷிலா ஹன்சமாலிக்கு சிறைச்சாலையில் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி