1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

திருகோணமலை – கும்புறுப்பிட்டி, நாவற்சோலை கடற்கரையில் 6 மீன்படி படகுகள் இனந்தெரியாத விசமிகளால், இன்று (16) அதிகாலை 1 மணியளவில் எரியூட்டப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலைக் கைப்பற்றியிருக்கும் தலிபான்கள் "வெற்றி பெற்றதாக" அறிவித்துள்ளனர். இதனால் அங்கு அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகளின் கட்டுப்பாடு கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

இலங்கையின் சிரேஸ்ட்ட இடதுசாரித் தலைவர்களில் ஒருவரை சிஐடிக்கு வருமாறு பொலிசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. இதற்கிடையே, ஹைதி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 29 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஆப்கானிஸ்தானை விட்டு அந்நாட்டின் அதிபர் அஷ்ரஃப் கனி சென்று விட்டதாக அங்குள்ள அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவருகின்றன.

நாட்டில் திடீரென ஆம்புலன்ஸ் வந்தது குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வந்துள்ளன.முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், வெளிநாட்டிற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் கட்டுநாயக்க வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இலங்கையிலுள்ள அனைவரும் கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கியுள்ளதை உணர்ந்து செயற்பட வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் C.V. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாளை (16) முதல் தினமும் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

கொரோனா தொற்றிலிருந்து உயிரை பாதுகாத்துக்கு கொள்வதற்காக, நாளை திங்கட்கிழமை முதல் சுய பயணக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு இலங்கை பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண, பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி