1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக

4 படகுகளையும்  அதிலிருந்து 25 மீனவர்களையும்  இலங்கை கடற்படை கைது செய்துள்ளமையைக் கண்டித்து தமிழ்நாடு பாம்பன் மீனவர்கள் இன்று திங்கட்கிழமை(1) காலை கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரி பாம்பன் சாலை பாலத்தில் மீனவர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
 
பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 50 க்கும் மேற்பட்ட நாட்டு பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
 
IMG 20240701 125123 800 x 533 pixel
 
 நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (1) அதிகாலை இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 4 நாட்டு படகுகளையும் அதிலிருந்து இருதயராஜ், கிரேசியான், லயோனஸ் உள்ளிட்ட  25 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
 
 முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம்  ஒப்படைக்க உள்ளனர்.
 
IMG 20240701 125112 800 x 533 pixel
 
இந்நிலையில் பாம்பன் பகுதி நாட்டுப்படகு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தமை யை   கண்டித்து   மீனவர்களின் உறவினர்கள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் சாலை பாலத்தின் முகப்பு பகுதியில் அமர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
 
IMG 20240701 125103 800 x 533 pixel
 
மீனவர்களின் இந்த சாலை மறியலால் மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நடத்திய  பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மீனவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ள நிலையில் மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் மீனவர்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
 
 கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மீனவரின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி