1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4-ல் இருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை  அதிகரிக்கக்கூடும்.

இதனால் ; முற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 வரை திறந்தவெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும் சென்னை வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வுமையம் விடுத்துள்ள அறிவிப்பில் ; ஏப்ரல் 1 முதல் 4 வரை தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழக பகுதி நோக்கி வீசுவதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட நான்கிலிருந்து ஆறு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.

வரும் 5ஆம் திகதி கரூர், தர்மபுரி, சேலம் நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட மூன்றிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இதன் காரணமாக ஒருசில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும். பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் முற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 வரை திறந்தவெளியில் வேலை செய்வது மற்றும், ஊர்வலம் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி