எமது மண் எமக்குவேண்டும்! 906வது நாளாக தொடரும் பொத்துவில் கனகர்கிராம மக்களின் பேராட்டம்!
நாம் காலாகாலமாக வாழ்ந்துவந்த காணியை மீட்டுத்தாருங்கள் என பொத்துவில் 60ஆம் கட்டை கனகர்கிராம தமிழ்மக்கள் மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.நேற்று (14)ஞாயிற்றுக்கிழமை அவர்கள் 906வது நாளாக போராட்டக்கூடத்தில் குழுமியிருந்தவேளையில் அங்கு வழக்கமாகச்சென்று உதவிவரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளரும் சமுக உணர்வாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலிடம் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.