46 நாட்களில் கடற்படையின் வலையில் சிக்கிய 179 இலங்கையர்கள்!
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 179 இலங்கையர்கள் கடந்த ஒன்றரை மாதத்திற்குள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேற்கு, கிழக்கு, வடக்கு, வடமேற்கு, வட-மத்திய மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளில் இலங்கை கடற்படை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 179 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 42 படகுகள், ஒரு லொரி மற்றும் ஒரு முச்சக்கர வண்டி பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.