1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

லடாக் பகுதியில் சீன எல்லையில் இந்தியா மேலும் 50 ஆயிரம் இராணுவ வீரர்களை குவிக்கிறது.லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு சீனா இராணுவத்தினருக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்தியா-சீனா எல்லை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. இதையடுத்து இருதரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டன.

இரவு வேளைகளில் சிவில் உடையில் வரும் குழுக்கள், சமூக செயற்பாட்டாளர்களை கடத்திச் செல்வது, நாட்டில் மீண்டும் காணாமல் போகச் செய்யும் செயற்பாட்டின் ஆரம்பம் என  கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதற்கு எதிராக போராடும் இலங்கையின் முன்னணி அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது. 

இந்தியாவில் இப்போது தான் கொரோனா இரண்டாம் அலையினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்த வருகிறது. தமிழ்நாட்டில் இன்று புதிய கட்டுப்பாடுகள் செயல்பாட்டிற்கு வந்தன.

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழக பேராசிரியர் நீலிகா மலவிகே கொவிட் தடுப்பூசி  நிபுணத்துவ ஆலோசனை  கமிட்டியிலிருந்து விலகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

முகநூலில் தன்னைப் பற்றி தவறாக எழுதிய இருவரை கடத்தி சிலுவையில் அறைந்த கண்டி – பலகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சிங்களப் பூசாரி ஒருவர் உட்பட மேலும் மூவர் நேற்று கைதாகியிருந்தனர்.

அண்மையில் விடுதலை செய்யப்பட்ட பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளில் பெரும்பாலானோர் எதிர்வரும் ஒரு வருட காலத்திற்குள் விடுதலை செய்யப்பட இருந்தவர்களாவர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்னேரிய தேசிய பூங்காவில் வன பாதுகாப்பு அதிகாரிகளை அச்சுறுத்தியாக  இராணுவ மேஜர் ஜெனரலுக்கு கெக்கிராவ நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் இன்று (திங்கட்கிழமை) காலையில் இருந்து மாலை 9 மணிவரை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.

சிரியா, ஈராக் நாடுகளின் எல்லை பகுதிகளில் அமெரிக்க ராணுவம் வான்வழித்தாக்குதல் நடத்தி உள்ளது.ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது, ஆளில்லா விமானங்கள் மூலம் ஈரான் பயங்கரவாத அமைப்புகள் தொடர் தாக்குதலை நடத்தி வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்காவின் ராணுவ மையமான பென்டகன் தெரிவித்துள்ளது. பயங்கரவாத மையங்களாகவும், ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ள இடங்களாகவும் செயல்பட்ட இடங்கள் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ஷ அமைச்சரவை அமைச்சராக பதவி பிரமாணம் செய்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாவ சிறிசேன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திஸாநாயக்க ஆகிய இருவரும் அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளனர்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி