1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இன்று (25) முதல் எதிர்வரும் இரண்டு வாரகாலப் பகுதியில் நடைபெற ஏற்பாடாகியிருந்த அனைத்து அரச விழாக்களையும் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

றிசாத்தின் கைதுக்கு எதிராக பேச அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தைரியம் உள்ளதா? என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வி எழுப்பினார். இன்று(25) கொழும்பிலுள்ள ஊடகங்களிடம்  கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

திட்டமிட்டபடி மக்கள் விடுதலை முன்னணியின் மேதினக் கூட்டம் இடம்பெறும் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

அத்தியவசிய யாத்திரை மற்றும் வழிபாடுகளுக்காக மாத்திரம் கதிர்காமம் புனித ஸ்தலத்திற்குள் பிரவேசிக்குமாறு ஆலய நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

டாக்டர்.ஜலீல் பார்க்கர், இந்தியாவின் தலைசிறந்த நுரையீரல் நிபுணர்களில் ஒருவர், முகத்தில் கடுமையான சோர்வு தெரிகிறது, மும்பை மாநகரத்தின் லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளைக் கவனித்தபடி தொலைக்காட்சிகளிலும் தோன்றி கோரமான கோவிட் இரண்டாம் அலை எப்படி ஆயிரக்கணக்கில் இந்தியர்களை தினமும் விழுங்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்.

அரசுக்குள் இருக்கின்ற வேற்றுமைகளை ஜனாதிபதியும், பிரதமரும் உடன் களையவேண்டும். இல்லையேல் அரசை எவராலும் காப்பாற்ற முடியாது என ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இராணுவ அதிகாரிகளின்பாரிய குற்றம் மற்றும் ஊழல், ஆளும் கட்சி அரசியல்வாதிகளையும் அவர்களின் குடும்பத்தைக் காப்பாற்றும் பிரதமரின் முன்மொழிவை நிராகரிக்குமாறு சர்வதேச சட்டத் துறையியல் வல்லுநர்கள் இலங்கையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ள போதிலும் , அவை எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் காலவதியாகிவிடும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான லலித் வீரதுங்க தெரிவித்தார்.

கொரோனா முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் சிலர் நடிகர் விவேக் மரணத்திற்கு பின்னர் இரண்டாவது ஊசி செலுத்திக்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் வீட்டைச் சுற்றி வளைத்துள்ளனர். இதேவேளை, ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனை அவரது வீட்டில் வைத்து சற்றுமுன் சி.ஐ.டி யினர் கைது செய்துள்ளனர்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி