1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஆளும் கட்சிக்குள் தனி பிரிவுகளுக்கு இடமில்லை என்று மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதிக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உத்தராகண்ட் மாநிலத்தில் சமொலி மாவட்டத்தின் ராய்னி கிராமத்தில் தபோவன் பகுதியில் இன்று (பிப்ரவரி 7, ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட ஒரு பெரிய பனிச்சரிவு மற்றும் அதனால் நதிகளில் உண்டான வெள்ளம் ஆகியவற்றால், இதுவரை குறைந்தது 10 பேர் இறந்துள்ளது உறுதியாகியுள்ளது.

தமிழர்களின் உரிமைகளை கோரும் நோக்குடன் நடத்தப்பட்ட பாரிய போராட்ட பேரணி, இன்றுடன் (பிப்ரவரி 07) நிறைவடைந்தது. கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் முதல் வடக்கு மாகாணத்தின் பொலிகண்டி வரை தமிழர்களின் உரிமைகளை கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.பொத்துவில் பகுதியில் கடந்த 3ம் தேதி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அரச தலைவராக பொறுப்பேற்ற கோதபாய ராஜபக்ஷ அரசியல் அரங்கில் அனுபவம் வாய்ந்த நபர் அல்ல என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.அவர் நாட்டின் தலைமையை ஏற்றுக் கொண்ட பின்னர் அவருக்கு மொட்டின் தலைமை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் கொவிட் தடுப்பூசி பெற்ற பின்னர் இலங்கைக்கு வரும் தொழிலாளர்கள் தாங்களே சுய தனிமைப்படுத்த தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்குமாறு மத்திய கிழக்கிற்கான இலங்கை தொழலாளர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவையின் மற்றொரு கட்டம் ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்றது.வீரவில – அக்போபுர கிராமத்தில் இன்று நடைபெற்ற இந்த வேலைத்திட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பிரதேச அரசியல்வாதிகள் சிலரும் பங்குபற்றினர்.

கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இனவாத இராஜ்ஜியம் உருவாகியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அரச இணையத்தளங்களை இலக்கு வைத்து .LK என பதிவு செய்யப்பட்டுள்ள சில இணையத்தளங்கள் (LK domains) முடக்கப்பட்டுள்ளதாக .LK இணையத்தள பதிவாளர் பேராசிரியர் கிஹான் டயஸ் தெரிவித்தார்.

மேற்கத்தைய வானம் (பட்டகிர அகச)  பியாவி போன்ற பிரபலமான தொலைக்காட்சி நாடகங்களை இயக்கிய இயக்குனர் சா​மர ஜனராஜ் பீரிஸ் தனது (உத்துரு சுலங்க) 'வடக்கு காற்று' திரைப்படத்தை மார்ச் 5 முதல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

இலங்கைக்கு இரண்டு தேசிய கீதம் எவ்வாறு அறிமுகம் செய்தார்கள் என்று எங்களுக்கு தெரியாது. ஒரே நாடு ஒரே கீதம். இந்தியாவில் பல மொழி பேசும் மக்கள், பல இனத்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு தேசிய கீதமே. அன்று பிரித்தானியர்கள் வழங்கிய அனுமதிக்கு இன்றும் நாம் தீர்க்க முடியாமல் தவித்து கொண்டிருக்கிறோம்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி