1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொழும்புத் துறைமுகத்திலுள்ள கேந்திர முக்கியத்துவமிக்க கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்திசெய்கின்ற இந்தியா ஜப்பானுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக இலங்கை ஒருதலைப்பட்சமாக அறிவித்த நிலையில் மறுநாளான நேற்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை அவசர அவசரமாக சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும், ஊடகவியலாளருமான செ.நிலாந்தனுக்கு பொலிசார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தமிழ் தேசிய இனத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பெருந்தோட்ட உழைக்கும் வர்க்கத்திற்கும் எதிரான அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து சுதந்திர தினத்தைப் புறக்கணிப்போம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அறைகூவல் விடுத்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ்க் கட்சிகளின் நடைபவனி ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மியன்மாரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்ற ஆங் சான் சூகி நாடாளுமன்றின் முதலாவது அமர்வைக் கூட்டவிருந்த நாளில் அந்நாட்டின் இராணுவம் பலவந்தமாக ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. ஐக்கியநாடுகள் சபை தொடங்கி உலக நாடுகள் பலவும் கண்டித்துள்ள இந்த ஜனநாயக மீறலை இலங்கை மக்கள் தங்களுக்கான ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

கொவிட் வைரஸ் தொற்று காரணமாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்கை பெற்று வந்த மருத்துவர் கயான் தன்தநாராயண சுவாசப் பைகள் செயலிழந்த நிலையில் இன்று (2) காலை காலமானார். இலகையில் கொரோனா தொற்று காரணமாக மரணித்த முதலாவது மருத்துவர் இவராவார்.

ஒரு ஜனாதிபதியாகவிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு வந்த மஹிந்தவைப் பார்த்து அப்போது பலர் சிரித்தனர். அவரை கேலி செய்தனர். ஆனால் மஹிந்த எல்லாவற்றையும் இழந்து மீண்டும் பிரதமரானார் அது இலங்கையில் நடந்தது

உத்தமதூதர் அன்னல் நபியை இழிவுபடுத்தி பேசிய கல்யாண ராமனை கைது செய்யுமாறுகோரி தமிழ் நாடு தவ்ஹீத் அமைப்பினரால் சேலம் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி