1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில் பிரதேசத்தில் அண்மைக் காலமாக பொது மக்களின் காணிகளை அரசாங்கம் அவர்களுக்கு தெரியாமல் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளைக் கொண்டு அளந்து வருவதாக சட்டத்தரணியும் அம்பாறை மாவட்ட பொத்துவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமாகிய முஷர்ரப் முதுனபீன் தெரிவித்தார்.

இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் அலைனா பீ ஸ்டெப்லிஸ் மின் உற்பத்தி நிலைய முதலீட்டுத் திட்டமொன்றை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்கா இந்நாட்டு எரிசக்தித் துறையில் நுழையும் முயற்சி உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு – புறக்கோட்டையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபை மத்திய பஸ் நிலையம் மற்றும் பெஸ்டியன் மாவத்தையில் அமைந்துள்ள பஸ் நிலையம் என்பன இன்று (15) நள்ளிரவு முதல் திறக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றின் காரணமாக மரணிகும் முஸ்லிம்களின் உடல்கள் குறிப்பிட்ட பிரதேசத்தில் அடக்கம் செய்வதற்காக அமைச்சரவை அனுமதியளித்திருப்பதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவும் நிலையில் மக்கள் முகக் கவசம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதைப் பயன்படுத்தி அரச மருந்தக கூட்டுத்தாபனம் கொள்ளை லாபமீட்டத் தொடங்கியுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்னறனர்.

சுகாதார அமைச்சின் பேச்சாளர் பதவியிலிருந்து மருத்துவர் ஜயருவன் பண்டார நீக்கப்பட்டுள்ளார்.இன்று காலை சுகாதார அமைச்சர் பவித்திராவன்னியாராச்சி இந்த உத்தரவைபிறப்பித்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜயவர்தனபுர கோட்டை, பொல்துவ பாலத்திற்கருகில், கடந்த 11ம் திகதி அதிகாலையில் அனுமதியின்றி மீன் பிடித்துக் கொண்டிருந்த இருவரின் படகு மீது பாதுகாப்புப் பிரிவினரின் படகு மோதியதில் ஒருவர் நீரில் மூழ்கி இறந்துள்ளார். மற்றவர் நீந்தி உயிர் பிழைத்துள்ளார். இறந்த நபருக்கு கொரோனா தொற்றியுள்ளதாகக் கூறி சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் தடுத்து வைத்துள்ளனர்.

இலங்கையில் பெண்கள் வெளி நபர்களைவிட, தமக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து இரு மடங்கு உடல் ரீதியான துஷ்பிரயோகங்களை அனுபவிக்கின்றமை தெரியவந்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோதபாயவின் பல கொள்கைகளுடன் நான் உடன்படவில்லை என்றாலும்,அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரை அவர் தான் எனது ஜனாதிபதியாக இருப்பார் என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா ஒழிப்பிற்கு பணம் தேவைப்படுவதாகக் கூறி அரசாங்கம் பல்வேறு தனவந்தர்களிடமிருந்தும் வியாபாரிகளிடமிருந்தும் சேகரித்த கொவிட் அனர்த்த நிதியத்தில் பணம் செலவீடு செய்த முறை மற்றும் எஞ்சியுள்ள பணம் சம்பந்தமாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக தற்போது மூடப்பட்டிருக்கும் கொழும்பு புறக்கோட்டை மெனிங் மார்கட்டிற்குச் சொந்தமான வர்த்தகப் பெறுமதிவாய்ந்த மிகப்பெரிய காணியை விற்கும் திட்டத்திற்கமைய  அங்கு காணி அளவீடு செய்யப்பட்டு வருகிறது.

கொரோனாவால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்கவேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் முஸம்மில் வேண்டுகோள் விடுத்துள்ளார் என ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

கல்முனை மாநகரத்திற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுகின்றது. குறித்த பகுதிக்கு அன்றாடம் சுமார் 10 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வருகை தந்த வண்ணம் உள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி