1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளின் கீழ் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு தேவையான வசதிகள் வழங்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு திருத்த சட்டமூலத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் 105 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத்திட்டத்திற்கான வாக்களிப்பில் இருந்து விலகியிருக்க பல அரசியல் தரப்பினர் இன்று பாராளுமன்றத்தில் தீர்மானித்துள்ளனர்.

மே 09 ஆம் திகதி பொது அமைதியின்மையின் போது ஹோகந்தரவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் இல்லத்தை தாக்கி தீ வைத்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லிட்ரோ எரிவாயுவின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். 

அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (5) நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைப்படவு்ளளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக  கடந்த ஆகஸ்ட் மாதத்தில் லிட்ரோ எரிவாயுவின் விலை இரு தடவைகள் குறைக்கப்பட்டன.

தற்போது, 12.5 கிலோ லிட்ரோ எரிவாயுவின் விலை 4,664 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாளை (03) காலை 8 மணி முதல் நாளை மறுதினம் (04) அதிகாலை 2 மணி வரை பிரதேசங்கள் சிலவற்றுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் ரயில் சேவைகள் தாமதடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கடந்த 30 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால  பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது. 

நாட்டைச் சூழவுள்ள பிரதேசங்களில் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை ஒன்று உருவாகக்கூடிய கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சிறந்த முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி, முதலீட்டாளர்களைப் பாதுகாக்கும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் அரச மற்றும் தனியார் துறை தலைவர்களை உள்ளடக்கிய எட்டு (08) செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நாட்டில் நிலவும் எரிபொருள், எரிவாயு மற்றும் நெல் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க இன்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி