1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் இன்று காலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கோஸ்ட் நகருக்கு அருகே உணரப்பட நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி முதலான பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில், மொரட்டுவை மாநகர சபை உறுபபினர் ஒருவர் உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் கல்வியாண்டுக்கான பாடசாலைகளில் அடிப்படைத் தேவைகளை எவ்வித தட்டுப்பாடும் இன்றி பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

 

பாடசாலைகளின் பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்குத் தேவையான கடதாசிகள் இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அடுத்தாண்டு பாடசாலை சீருடைகளுக்கு தேவையான பொருட்களை வழங்குவது குறித்து உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் சீன அரசுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபரிலும் 2022 தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை நவம்பர் மாதத்திலும் நடத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் அவசர உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 50 மில்லியன் டொலர் அபிவிருத்தி உதவிகளை வழங்க அவுஸ்ரேலியா முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரரும் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் பொதுஜன பெரமுன உறுப்பினருமான ஜகத் சமந்த கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியினால் கட்டணம் செலுத்தப்பட்ட இரண்டு எரிபொருள் கப்பல்கள் எதிர்வரும் 23 அல்லது 24 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நாளை (20) முதல் இரண்டு வாரங்களுக்கு விரிவுரைகளை ஒன்லைனில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிடைக்கும் எரிபொருளை நாடளாவிய ரீதியில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண இலங்கைக்கு தமது அரசாங்கமும் பூரண ஆதரவை வழங்கும் என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உமர் பாரூக் புர்க்கி (Umar Farooq Burki) தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி