1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொள்ளுப்பிட்டியை சுற்றியுள்ள வீதிகளில் வாகன நெரிசல் காரணமாக கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் தாமதமாகி ஆரம்பித்ததாக ஜனாதிபதி செயலக வட்டாரங்களில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ் முற்போக்கு கூட்டணி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியின பெண் ஒருவர் நிராயுதபாணியாக நின்று சிறுத்தையுடன் சண்டையிட்டு தன் 6 வயது மகனை அதன் பாதங்களில் இருந்து பத்திரமாக மீட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாதகல் பிரதேசத்தில் கடற்படையினரை ஈடுபடுத்தி தனியார் காணிகளை வலுக்கட்டாயமாக கையகப்படுத்த மேற்கொண்ட முயற்சியை பெண்கள் உட்பட பிரதேச மக்கள் தோற்கடித்துள்ளனர்.

பெலாரூஸுக்கு வந்த ஆயிரக்கணக்கான குடியேறிகளுள் இராக்கைச் சேர்ந்த ஒரு யசீதி தம்பதியும் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை கடக்கும் நம்பிக்கையில் பெலாரூஸ் நாட்டிற்கு பயணம் செய்தார்கள். எல்லைகளில் மூன்று கொடூரமான வாரங்களை கடந்த பின்னர், அவர்கள் தாயகம் திரும்பினர்; அவர்களின் சேமிப்புகள் செலவழிந்து விட்டன; ஆனால், அவர்கள் மீண்டும் முயற்சி செய்ய உறுதியாக உள்ளனர். இது குறித்து லினா ஐஸ்ஸாவும் பீட்டர் பாலும் எழுதுகின்றனர்.

முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, (Arjuna Ranatunga) ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து அர்ஜூன ரணதுங்கவின் அடுத்த அரசியல் தரிப்பிடம் எது என்ற கேள்வி எழுந்துள்ளது.

உகாண்டாவை போலவே சீனாவின் கடன் இலங்கையை விழுங்கிக்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

‘ஒமிக்ரோன்” புதிய வைரஸ் திரிபு பரவக் கூடிய ஆபத்து இருக்கும் நிலையில் உலக எரிபொருள் விலை 10 வீதத்தினால் சரிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தின் பின்பு உலக எரிபொருள் விலை ஒரே நாளில் அதிக வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பம் இதுவாகுமெனவும் கூறப்படுகிறது.

ட்விட்டர் இணை நிறுவனர் ஜேக் டோர்சி, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகியதை அடுத்து, புதிய தலைமை நிர்வாகியாக இந்தியரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மேல் மாகாணத்தில் சுமார் 80,000 ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளதாக கமநல சேவைகள் ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்தின் திரப்பனை, இங்கினியாகம கிராம மக்கள் தண்ணீர், மின்சாரம், மலசலகூடம் போன்ற அடிப்படைத் தேவைகள் இன்றி தவித்து வருகின்றனர்.

துணிவிருந்தால் போர்க் குற்றங்கள் தொடர்பில் பேசுவதற்கு சர்வதேச நீதிமன்றத்துக்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சவால் விடுத்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி