1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உயர்கல்வியை இராணுவமயமாக்குவதற்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் உள்ளிட்ட குழு மீதான தாக்குதல் சர்வதேச அளவில் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.

சர்வதேச சமூகத்தின் முன் உள்ள அனைத்து சாதகமான அம்சங்களும் நேற்றைய சம்பவங்கள் மூலம் கழுவப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீனாவே தமது உண்மையான நண்பன் என இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளியிட்ட கருத்து, தெற்காசிய பிராந்திய அரசியலில் பேசுபொருள் ஆகியுள்ளது.

தமது அரசியல் நோக்கங்களுக்காக தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பயன்படுத்தி, அடக்கமுறை பலத்தையும் பிரயோகித்து மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் செயலாளர் குமார் குணரத்னம் கூறினார்.

இலங்கையின் பெரும்பாலான முக்கிய வங்கிகள் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதங்களை (Letters of Credit) வழங்குவதை நிறுத்திவிட்டதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரா கூறுகிறார்.சில வணிக வங்கிகள் கடன் கடிதங்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்கின்றன, ஆனால் கடன் கடிதங்கள் வழங்குவது நாளுக்கு நாள் தள்ளி வைக்கப்படுவதாக அவர் கூறினார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் பெரும்பான்மை மத்திய குழு உறுப்பினர்கள் உடனடியாக அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (08) ம் திகதி இரவு நடைபெற்ற ஸ்ரீ.ல.சு.க ஊடக சந்திப்பில் இந்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19- சீன நிறுவனம் இலங்கையில் சினோவக் தடுப்பூசியை இறுதி தயாரிப்பாக அறிமுகப்படுத்த முயற்சிக்கிறது என்ற செய்தி தொடர்பாக அகில இலங்கை நுகர்வோர் உரிமை செயற்பாட்டாளரான அசேல சம்பத் செய்த முறைப்பாட்டிற்கு அமைய அந்தச் செய்தியை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த Voice TUBE ஆசிரியர் துஷாரா செவ்வந்தி விதாரண 09.07.2021 (இன்று) சிஐடி குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அரசியல் சாசனத்தினால் வழங்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திர உரிமையையும், தான் கொண்டுள்ள கருத்தை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதற்கான உரிமையையும் மீறி ஆர்ப்பாட்டத்தை நிறுத்த சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எங்கிருந்து அதிகாரம் கிடைத்தது? இல்லாத அதிகாரத்தை செயற்படுத்தியமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவிருப்பதாக, பல்லேகலை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து முன்னிலை சோஷலிஸக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் நேற்று (8) ஊடகங்களிடம் தெரிவித்தார்.

கரீபியன் தீவு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ் (வயது 53) நேற்று முன்தினம் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த பயங்கர சம்பவத்தின்போது அவரது மனைவி மார்டின் மோயிஸ் படுகாயம் அடைந்தார்.

அரசாங்கம் மீண்டும் அடக்குமுறைகளை கையாள முயற்சிக்கின்றதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரித் திருத்தங்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி