1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

திரிஷ்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தேவஸ்ரீ உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி மகனான ரோஹித ராஜபக்ஷ தற்போது தங்கியிருக்கும் வீட்டின் பெறுமதி 30 கோடி ரூபாவுக்கு மேல் என சமகி மஹரகம நகர சபை உறுப்பினர் தனுஷ்க ராமநாயக்க தெரிவித்துள்ளார்.இணையத்தளம் ஊடாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார். எனினும் அந்த வீடு ரோஹித ராஜபக்ஷவின் பெயரில் உள்ளதா என்பது தனக்து தெரியாது. ஆனால் 30 ரூபா கோடி ரூபா பெறுமதியான வீட்டில் வசிக்கின்றார் என்பது மாத்திரமே தனக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரோஹித ராஜபக்ஷவின் பிறந்த நாள் அன்று அங்கு சிலர் கூடி பிறந்த நாள் கொண்டாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இது தொடர்பில் ரோஹித ராஜபக்ஷவிடம், ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போதிலும் அவர் இதுவரையிலும் பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் கேட்ட போது, குறித்த வீட்டில் தனது தம்பி வாழ்வதாகவும் வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவரது பிறந்த நாள் அன்று அங்கு விருந்துகள் அல்லது மக்கள் ஒன்றுக்கூடும் சம்பவங்கள் இடம்பெறவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் பி.1.617.2 அல்லது ‘டெல்டா கொவிட் வைரஸ்’ தொற்றிய 5 பேர் கொழும்பு தெமட்டகொடையில் கண்டறியப்பட்டுள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் தலைவர், விரிவுரையாளர் சந்திமா ஜீவந்தர ஊடகங்களிடம் கூறுகையில், ‘இந்த டெல்டா கொவிட் வைரஸ் மாதிரி இந்நாட்டில் வேகமாக பரவி வரும் பி.117 அல்பா பிரித்தானிய வைரஸ் மாதிரிக்கு ஒப்பீடாக 50% அதிக பாதிப்பைக் கொண்டுள்ளதாகவும், நோய் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்.

நாடு தற்போதுள்ள நிலைமையில் எரிபொருள் விலையேற்றம் அநாவசியமான ஒன்றாகும். அமைச்சரவையில் ஒரு கருத்தைக் கூறுபவர்கள் ஊடகங்களிடம் பிரிதொரு கருத்தைத் தெரிவிக்கின்றனர். இவ்வாறான இரட்டை கொள்கையை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியாளர்களை வலியுறுத்துவதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

குற்றப்புலனாய்வு பிரிவு நாட்டின் சட்டத்தை மீறி செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபருக்கு தடுப்புக்காவல் உத்தரவைக் கோரி குற்றப்புலனாய்வு திணைக்களம், சட்டத்தில் இல்லாத விதிகளை செயற்படுத்த முனைவதாக, கைதிகளின் உரிமைக்காக செயற்படும் முன்னணி குழு ஒன்று தெரிவித்துள்ளது.

இணையத்தின் ஊடாக மதுபான விற்பனைக்கு மதுவரித் திணைக்களம் விடுத்த வேண்டுகோளை ஜனாதிபதியின் தலைமையிலான கொவிட் -19 தடுப்புச் செயலணி நிராகரித்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட அளவில் எரிவாயு நிரப்பப்படாது சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

உலகின் மூன்றாவது பெரிய வைரம் ஆப்பிரிக்க நாடான போஸ்ட்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1095 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 3,106 காரட் அளவு கொண்டதாகும். அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய வைரம் போஸ்ட்வானா நாட்டில் 2015 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 1,109 காரட் அளவு ஆகும்.

வரி செலுத்தாமல் ஐரோப்பிய சந்தையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இழக்க நேரிடும் என்பதால் பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி