1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொவிட் தொற்று பரவலின் காரணமாக முழு உலகும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு , பயணக்கட்டுப்பாடுகள் , புதியதொரு வழமையான நிலை (நியூ நோர்மல்), தனிமைப்படுத்தல் மற்றும் சுயதனிமைப்படுத்தல் என பல்வேறு புதிய விடயங்களுக்கு பழகிக் கொண்டிருக்கிறது.

கொவிட் தடுப்பிற்கு முதலாவது தடுப்பூசியாக எஸ்ட்ரா ஷெனெகா (கொவிபீல்ட்) பெற்றுக் கொண்ட இலங்கையர்களுக்கான இரண்டாவது டோஸ் பைஷர் பயோடெக் தடுப்பூசியை பயன்படுத்த தயாராவதாக செய்திகள் கூறுகின்றன.

தோட்டத் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள குறித்து தோட்டத் தொழிலாளர் மத்தியநிலையம் தொழில் ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

இலங்கைத் தமிழர்களை ஏமாற்றியதைப் போல் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றலாம் என்று இலங்கை அரசு நினைத்தால் அது மிகப் பெரும் தவறு. இன்று சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முடியாத இக்கட்டான நிலையிலேயே இலங்கை அரசு உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

உலக எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களினால் உள்நாட்டு எரிபொருள் விலைக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்காக எனக் கூறி 2020 ஏப்ரல் மாதம் நிறுவப்பட்ட எரிபொருள் விலையை உறுதிசெய்யும் நிதியத்திற்கு என்ன நடந்துள்ளது என்பது பற்றி கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அச்சந்தர்ப்பத்தில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைவதனால் கிடைக்கும் இலாபத்தை மக்களுக்கு வழங்காமல், எரிபொருள் விலை எதிர்காலத்தில் அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த நிதியம் நிறுவப்பட்டதாக 2020ல் நிதியம் நிறுவப்பட்ட போது அரசாங்கம் கூறியது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதால் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை மறைப்பதற்காக வலுசக்தி அமைச்சர் கம்மன்பிலவிற்கும், பொதுஜன முன்னணியின் செயலாளர் சாகர காரியவசத்திற்குமிடையில் அரசாங்கம் மோதலை நிர்மாணித்துள்ளது. அதற்கு ஏமாற வேண்டாமென முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட நேற்று (13) ‘திவயின’ பத்திரிகைக்கு அளித்த நேர்காணலின் போது கூறியுள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை எனவும் அப்படி நடந்தால், ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் அத்துடன் முடிந்து விடக்கூடும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாட்டை 2 ஆம் திகதிவரை நீடிக்குமாறு சுகாதாரத்துறையின் உயர்மட்ட நிபுணர்கள் அரசிடம் பரிந்துரை செய்துள்ளனர். தற்போதுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை வரை நீடித்து அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மேற் குறிப்பிட்ட பரிந்துரையை அரசும் தீவிர பரிசீலனையில் எடுத்திருக்கிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரு ஆடைத் தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு ஆடைத் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இந்த விடயத்தினை கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் உறுதிப்படுத்தியுள்ளார்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி