1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில் அண்மையில் பெற்ற குழந்தையை துன்புறுத்திய தாய் பற்றிய செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தையை தத்தெடுப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் பொலிஸாருக்கு கிடைத்திருக்கின்றன.

அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் சட்டத்தரணிகள் குழு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது. 

இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லையெனில் அது தொடர்பான விசாரணைக்கு ஏன் அஞ்சுகின்றீர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கந்து வட்டி கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் இலட்சக்கணக்கான இலங்கை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நாட்டிற்கு நீதி கோரி சர்வதேச மகளிர் தினத்தன்று வட மத்திய மாகாணத்தில் தொடங்கப்பட்ட 'சத்தியாக்கிரகம்' இன்று மூன்றாவது நாளாகவும்தொடர்கிறது.

இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையில் இயங்கும் பதினொரு அமைப்புகள் அரசாங்கத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றை தடைசெய்வதுடன் அந்த அமைப்புகளின் தலைவர்களை கைது செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (11) வியாழக்கிழமை சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளார்.

உயிர்த்த ஞாயிறன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்குவைத்து தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என இணங்காணப்பட்டுள்ள முஸ்லிம் பிரிவினைவாதிகள் ஐவரையும் அடையாளம் கண்டுகொள்வதற்கான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபர் டப்புலா டி லிவேரா, பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவுக்கு  நேற்று (10) பணித்துள்ளார்.

சேவை நியமனங்களுக்கு வெளியே அதிபர் சேவையிலும், கல்வி நிர்வாக சேவையிலும் உள்ள வெற்றிடங்களுக்கு நியமனங்கள் வழங்குவதற்கான அமைச்சரவை முடிவை உடனடியாக ரத்து செய்யுமாறு கல்வி அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வாகநேரி நீர்ப்பாசன திட்டத்திற்கான சிறுபோக விவசாய ஆரம்ப கூட்டம் விவசாயிகளின் பங்களிப்பின்றி அதிகாரிகள் பங்கேற்ற நிலையில் நடைபெற்றது.

தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை ரூ.1000க அங்கீகரிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி