1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மிகவும் மோசமான முறையில் வீழ்ச்சி அடைந்துள்ள ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் உறங்குவதாக நாட்டின் உயர்மட்ட வங்கி அதிகாரிகளை ஜனாதிபதி கடுமையாக குற்றசாட்டிய தினத்தன்றே இலங்கை மத்திய வங்கியினால் 115,000 கோடியை விடுவிக்கும் முடிவானது ரூபாவின் மதிப்பிழப்பு உள்ளிட்ட பேரழிவான விளைவுகளை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தேர்தல் காலத்தில் உள்ளகப் பயிற்சிகளுக்காக வைத்தியர்களை ஆட்சேர்ப்பு செய்வதை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்ட தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு வைத்தியர்களின் சக்திவாய்ந்த தொழிற்சங்கமான அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 8,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

லடாக், கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ம் தேதி இரவு இந்தியப் படையினரைத் தாக்குவதற்கு சீனப் படையினர் பயன்படுத்தியதாக கூறப்படும் ஆயுதங்களின் படம் ஒன்று வெளியாகியிருக்கிறது.

கடந்த ஆண்டு உதித்த ஞாயிறு தாக்குதலின் போது இலங்கையின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிசுக்கு பொறுப்பான அமைச்சராக இருந்தார்.

இலங்கையின் தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும்  மற்றும் மறைமுகமாகவும்  வேலை இழந்துள்ளனர்.

பொருளாதாரத்திற்கு பணப்புழக்கத்தை எளிதாக்குவதற்காக உள்ளூர் பணச் சந்தையின் பணப்புழக்கத்தை அதிகரிக்க 115 பில்லியன்  இலங்கை மத்திய வங்கி சட்டரீதியான இருப்பு விகிதத்தை குறைத்துள்ளது.

தொற்றுநோய் அச்சுறுத்தலையடுத்து பில்லியன் கணக்கான ரூபாய்களை சேகரித்துள்ள ஜனாதிபதி செயலகத்தின் இடுகம திட்டத்திற்கு, நிதி திரட்டுமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தெற்கு மீனவர்கள் வட கடலில் மீன்பிடித்தலை நிறுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.இந்த போராட்டத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜூன் 15 திங்கள் அன்று வடமராச்சி கிழக்கில் உள்ள மருதங்கேனி பிரதேச செயலகம் முன் ஏற்பாடு செய்யப்பட்டது.

நாடு திறந்து மூன்று வாரங்கள் கழித்து, சமூகத்திலிருந்து எந்த கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கூறியுள்ள நிலையில் புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அனுராதபுரம் கெபதிகொல்லாவையிலிருந்து பதிவாகியுள்ளார்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி