1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பிகாரில் மின்னல்தாக்கி 83 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 24 பேரும் உயிரிழந்துள்ளனர்.பிகாரில் அதிகபட்சமாக கோபால்கஞ் என்னும் மாவட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்மாநிலத்தின் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

நாரஹென்பிட்டி பொலிஸ் நிலைய சிறைக்கூடத்திற்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று (25) அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொவிட் 19 ன் போது பல சிரமங்களை சந்தித்த மேல் மாகாண செவிலியர்களுக்கான கொடுப்பனவுகளில் வெட்டு விழுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அனைத்து இலங்கை செவிலியர் சங்கமும் முடிவு செய்துள்ளது.

ராஜினாமா செய்வதை விட்டு விட்டு உங்களது அறிவை நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்படுத்துங்கள் என்று நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சரும் பிரதமருமான மகிந்த ராஜபக்ச மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மனிடம்  கேட்டுள்ளார்.

கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் புலனாய்வுப் பிரிவைச் சேர்நத காவலரொருவர்  தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வௌிநாடுகளில் பணியாற்றிய 23 இலங்கை உழைப்பாளிகள் கொரோனா தொற்றின் காரணமாக இறந்துள்ளதாக வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கூறுகிறது.

கொரோனா தொற்று காரணமாக தேயிலைத் தோட்ட கம்பனிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை கவனித்து அரசாங்கம் வரிச் சலுகை வழங்கியுள்ளது. அதன்படி, தேயிலை ஏற்றுமதியின் போது தேயிலை ஊக்குவிப்பு மற்றும் விற்பனை வரி அறவிடுவதை 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் ஒரு கிலோ தேயிலைக்கு அறவிடும் ரூ.3.50 ஊக்குவிப்பு மற்றும் விற்பனை வரி அறவிடுவதை 6 மாதத்திற்கு நிறுத்துவதாக பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சர் ரமேஷ் பதிரன கூறுகிறார்.

மக்கள் தனக்கு வழங்கிய மகத்தான ஆணையின்படி, அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பேன்.

கடந்த வருடத்தின் இலங்கைக்கான அந்நிய செலாவணி வருவாயின் முக்கிய ஆதாரமாக “நாட்டின் வீரர்கள்“ என வர்ணிக்கப்படும்  வெளிநாட்டு தொழிலாளர்களே காணப்படுவதாக, தலைநகரில்  இயங்கும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி