இரண்டாவது டோஸை வழங்கும் வரை முதல் டோஸ் இல்லை!
அஸ்ட்ராஸெனகா மற்றும் சினோஃபார்ம் தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸை வழங்கும் வரை நகரவாசிகளுக்கு முதல் டோஸ் சினோஃபார்ம் தடுப்பூசி வழங்கப்போவதில்லை என்று கொழும்பு மாநகர சபை முடிவு செய்துள்ளதாக கொழும்பு மாநகர சபை மேயர் ரோஸி சேனாநாயக்க, இன்று தெரிவித்தார்.