1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர  குறிப்பிட்டுள்ளார் குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்ட சம்பவம் தொடர்பாக சர்வதேச விசாரணை விரைவில் ஏற்படுத்தப்படவுள்ளதாக ஹியூமன் றைட்ஸ் போட் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு முன் இலங்கை தேசத்திற்கு அப்படியொரு முடிவு எடுக்கப்பட்டிருந்த வேளையில் ஐ .நா மனித உரிமை பேரவை 30/01,40/01 தீர்மானங்களை கொண்டு வந்து இலங்கைக்கு கால அவகாசம் வழங்கி இருந்தது.ஆனால் அது  நடை முறைப்படுத்தப்படவில்லையென  அந்த அமைப்பு சர்வதேசத்திற்கு தெரிவித்துள்ளது.

ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி  ஆகிய மூன்று கட்சிகளும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டி இடவுள்ளததாக அறியக்கிடைக்கின்றது.

பாலின சமத்துவம் என்பது அடிப்படை உரிமை மட்டுமல்ல, அது சமூக நீதி. இன்று சர்வதேச மகளிர் தினம். இது கொண்டாட்டமாக கட்டமைக்கப்படுகிறது ஆனால் இது கொண்டாடப்படுவதற்காக உருவாக்கப்பட்ட நாள் அல்ல, ஒரு போராட்டத்திற்கான, புரட்சிக்கான விதை விதைக்கப்பட்ட நாள்.

சமகி ஜனபலவேகயவின்  தோற்றத்துடன் ஐ.தே.க இரண்டாக உடைவதைத் தடுப்பதற்காக ஐ .தே.க யின் தலைமைப் பொறுப்பை கருஜயசூர்யவிடம் ஒப்படைக்கவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க கடந்த மார்ச் 2 ம்திகதி இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

ஐ .நா மனித பேரவையில் வெளிநாட்டமைச்சர் தினேஷ் குனவர்த்தன தான்தோன்றித்தனமாக செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தினேஷ் மீது கடுமையான கோபத்துடன் நடந்துள்ளதாக தெரிய வருகின்றது. அவருக்கு கொடுத்த பொறுப்பை அவர் மீறிவிட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பல வேகய கூட்டணிக்கு இன்று ரவி கருணாநாயக்க எவ்வித நிபந்தனையும் இல்லாமல் அன்னச்சின்னத்தை கொடுத்திருப்பதாக அறியக்கிடைகின்றது.

நல்லாட்சி அரசாங்கத்தில் அமுல்படுத்தப்பட்ட எரிபொருள் விலைச்சூத்திரம் இதுவரையில் நடைமுறையில் இருக்குமாயின் 1 லீட்டர் 20 ரூபாவால் குறைந்திருக்கும் அத்துடன் பேருந்துகட்டணம்,முச்சக்கர வண்டி கட்டணம் என்பனவும் குறைந்திருக்கும் இதனால் மக்களுக்கு இலகுவாக இருந்திருக்கும் என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

பலவந்தமாக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர்களை கண்டுபிடித்து தருமாறு கோரி தமிழ் மக்களில் பெரும்பாண்மையானோர் எவ்வித நீதியும் இல்லாமல் தங்களது போராட்டம் தொடர்வதாக ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்திருக்கின்றார்கள்.

சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகய கட்சியுடன் ஐ.தே.க ஒன்றுபட்டு செயற்படுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ளவிருப்பதாக அறியக்கிடைக்கின்றது.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொதுஜன சந்தானய கட்சியின் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் குழுவில் விமல் வீரவங்ச வாசுதேவ நாணயக்கார உதய கம்மன்பில ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை.

கேரளாவில் கலப்புத் திருமணம் மற்றும் மதம் மாறி திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பாக வசிப்பதற்காக காப்பகங்களை ஏற்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது பேசுகையில் களுகு அடி அடிப்பேன் என்று கூறி இருந்தார். இந்த வார்த்தையை வாபஸ் பெற வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கேட்டிருந்தது. இவர்கள் இப்படி இருக்கையில் பொதுத்தேர்தலில் ஒன்றாக போட்டி இடுவது எப்படி என்று கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.

இம்முறை பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகய கட்சியில் நுவரெலிய மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்று ஹிருனையா ஹேரத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

கண்டி மாவட்ட ஐ.தே.க ஆதரவாளர்கள் அணைவரும் சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகய கட்சியில் இணைகிறார்கள்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி