1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஏராவூரில் சில நபர்களை முழந்தாளிடச் செய்து இரு கைகளையும் உயர்த்திக் கொண்டிருக்குமாறு  அச்சுறுத்திய காட்சிகளைக் கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகளில் உலா வருகின்றன. மேற்படி நபர்கள் பயணக் கட்டுப்பாடை மீறியதானல் இராணுவம் இவ்வாறு முழந்தாளிட வைத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அந்தப் புகைப்படங்களில் இராணுவத்தினர் தடிகளை கையில் வைத்துக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது.

நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி மாயமான 16 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பருவமழைக் காரணமாக நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அங்குள்ள  இந்திரவதி மற்றும் மேலம்ஷி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான சனத் ஜயசூரிய நாட்டை விட்டுச் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீரவிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

52 கிலோகிராமுடன் பயணித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அஹங்கம, ஹிக்கடுவ, பத்தேகம மற்றும் காலி ஆகிய இடங்களில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவின் தலைசிறந்த அணு விஞ்ஞானிகளில் ஒருவர் மர்ம மரணம் அடைந்து உள்ளார்.சீனாவில் அமைந்துள்ள ஹார்பின் பொறியியல் பல்கலை கழகத்தின் துணை தலைவர் மற்றும் அந்நாட்டின் தலைசிறந்த அணு விஞ்ஞானிகளில் ஒருவராக பேராசிரியர் ஜாங் ஜீஜியான் இருந்து வந்துள்ளார்.

2020ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றம் தெரிவாகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த் 3ம் திகதி புலனாய்வுப்பிரிவினர் எனக் கூறி வந்தவர்களினால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட இளைஞன் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் போர்த்துகீசிய கப்பலில் இருந்து கசியும் எண்ணெய் கடலில் கலப்பதாக செய்திகள் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

திரிஷ்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தேவஸ்ரீ உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி மகனான ரோஹித ராஜபக்ஷ தற்போது தங்கியிருக்கும் வீட்டின் பெறுமதி 30 கோடி ரூபாவுக்கு மேல் என சமகி மஹரகம நகர சபை உறுப்பினர் தனுஷ்க ராமநாயக்க தெரிவித்துள்ளார்.இணையத்தளம் ஊடாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார். எனினும் அந்த வீடு ரோஹித ராஜபக்ஷவின் பெயரில் உள்ளதா என்பது தனக்து தெரியாது. ஆனால் 30 ரூபா கோடி ரூபா பெறுமதியான வீட்டில் வசிக்கின்றார் என்பது மாத்திரமே தனக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரோஹித ராஜபக்ஷவின் பிறந்த நாள் அன்று அங்கு சிலர் கூடி பிறந்த நாள் கொண்டாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இது தொடர்பில் ரோஹித ராஜபக்ஷவிடம், ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போதிலும் அவர் இதுவரையிலும் பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் கேட்ட போது, குறித்த வீட்டில் தனது தம்பி வாழ்வதாகவும் வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவரது பிறந்த நாள் அன்று அங்கு விருந்துகள் அல்லது மக்கள் ஒன்றுக்கூடும் சம்பவங்கள் இடம்பெறவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் பி.1.617.2 அல்லது ‘டெல்டா கொவிட் வைரஸ்’ தொற்றிய 5 பேர் கொழும்பு தெமட்டகொடையில் கண்டறியப்பட்டுள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் தலைவர், விரிவுரையாளர் சந்திமா ஜீவந்தர ஊடகங்களிடம் கூறுகையில், ‘இந்த டெல்டா கொவிட் வைரஸ் மாதிரி இந்நாட்டில் வேகமாக பரவி வரும் பி.117 அல்பா பிரித்தானிய வைரஸ் மாதிரிக்கு ஒப்பீடாக 50% அதிக பாதிப்பைக் கொண்டுள்ளதாகவும், நோய் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்.

நாடு தற்போதுள்ள நிலைமையில் எரிபொருள் விலையேற்றம் அநாவசியமான ஒன்றாகும். அமைச்சரவையில் ஒரு கருத்தைக் கூறுபவர்கள் ஊடகங்களிடம் பிரிதொரு கருத்தைத் தெரிவிக்கின்றனர். இவ்வாறான இரட்டை கொள்கையை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியாளர்களை வலியுறுத்துவதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி