1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக் கட்டுப்பாடுகள், ஜூன் 7ஆம் திகதி காலை 4 மணியுடன் தளர்த்தப்படுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அப்பயணக் கட்டுப்பாடுகள், ஜூன் 14 ஆம் திகதி வரையிலும், மேலும் ஏழு நாள்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.mahindarajapaksa.lk நேற்று (2) ஹெக்கர்களால் ஹெக் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

உலகில் முதன் முதலாக கொரோனா தொற்று சீனாவில் அறியப்பட்டது.உலகில் முதன் முதலாக கொரோனா தொற்று சீனாவில் அறியப்பட்டது. ஆனால் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

சுகாதாரத் துறையில் 20ற்கும் மேற்பட்ட சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டணி தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து  தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

சீனாவின் உதவியுடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசியை பாகிஸ்தான் அரசு 'இன்குலாப்' என்று விவரித்துள்ளது. பாக் வேக் என்ற இந்த தடுப்பூசி செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் உரிமையை அதானி நிறுவனத்திடம் தாரைவார்க்க ராஜபக்ஷ அரசாங்கம் மே 3ம் திகதி திருட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக முன்னிலை சோஷலிஸக் கட்சி கூறுகிறது.

கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சியின் அடக்குமுறை போக்குகளுக்கு ஆரம்பத்திலிருந்தே சவால் விட்ட முன்னணி அறிஞர் பேராசிரியர் கத்ரி இஸ்மாயில் காலமானார்.

கொழும்பு பிரபல ஹோட்டலில்  அண்மையில் நடந்த சந்திமால் ஜயசிங்கவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனிமைப்படுத்தல் மற்றும் பயணக்கட்டுப்பாட்டு சட்டங்களை மீறி கலந்துகொண்டவர்களில் மேலும் 06 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

கப்பலில் நேற்று முதல் நீர் கசிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் கப்பல் இதுவரையில் 50 சதவீதம் கடலில் மூழ்கியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்பட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை அமெரிக்கா உளவுபார்த்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் பங்கு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உள்வரும் பயணிகளுக்கு 10 நாட்கள் தடையுத்தரவு விதிக்கப்பட்டதன் பின்னர், நேற்றைய தினம் எட்டு விமானங்களினூடாக மொத்தம் 19 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

மொரட்டுவ பிரதேசத்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மொரட்டுவ நகர சபைத் தலைவர் சமன் லால் பர்னாந்துவின் பிணை கோரிக்கை மொரட்டுவ மேலதிக நீதவானினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் 41 வயதான நபர் ஒருவருக்கு ஹெச்10என்3 பறவைக்காய்ச்சல் பாதிப்பு உறுதியாகியுள்ளது.தற்போது உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் முதன் முதலாக 2019- ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தான் கண்டறியப்பட்டது. இந்த வைரசின் பிடியில் இருந்து உலகம் இன்னும் மீளாத நிலையில், சீனாவில்  எச்10என்3 என்ற புதிய வகை பறவைக் காய்ச்சல் மனிதரை பாதித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தை அத்திடிய பிரதேசத்திற்கு கொண்டு செல்ல அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.தற்போது பொலிஸ் தலைமையகம் அமைந்துள்ள கொழும்பு சைத்ய பாதையில் உள்ள கட்டிடம் 100 வருடங்களுக்கு மேல் பழைமையானதெனவும், அங்கு இடவசதிகள் போதுமானதாக இல்லையெனவும் அமைச்சரவை பத்திரமொன்றை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சமர்ப்பித்திருந்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி