1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உலகில் வேறு எங்கும் இல்லாத நூற்றாண்டு பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகள், நூல்கள், வரலாற்று ஆவணங்கள், 1800-களில் யாழ்ப்பாணத்தில் வெளியான பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் என மிகப் பெரிய எண்ணிக்கையிலான பொக்கிஷங்களை யாழ்ப்பாண நூலகம் தன்னகத்தே கொண்டிருந்தது.

நியூசிலாந்தில் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால், அபாய கட்டத்தை தாண்டி முக்கிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அத்தியாவசிய சேவைக்காக செல்வோர் இன்று (01) முதல் கடுமையாக பரிசோதிக்கப்படுவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொடிய கொரோனா தொற்றுநோயின்போது தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து தீர்மானங்களை மேற்கொள்ள அமைக்கப்பட்ட  உயர்மட்டக் குழு, மூன்று மாதங்களாக கூட்டப்படாத நிலையில் இது குறித்து கவலை வெளியிட்டுள்ள,  தொழிற்சங்கத் தலைவர்கள், ஒரு வார காலத்தில் குறித்த குழுவைக் கூட்டாவிடின் சுயாதீனமான ஒரு தீர்மானத்திற்கு வரவுள்ளதாக அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய, பொலிஸாரினால் சுகாதாரப் பணியாளர்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் கூட்டு தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்போவதாக, தொற்றுநோயை தடுப்பதில் முன்னின்று செயற்படும் சுகாதாரத்துறை தலைவர், பொலிஸ்மா அதிபருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்கமைய ஆணைக்குழுவின் தலைவராக காமினி மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளார்.

சீன நிறுவனத்துக்கு இலங்கை அரசு நிலத்தை குத்தகைக்கு விட்டிருப்பது, இந்தியாவின் நலனுக்கு ஆபத்தாக அமையும் என்று வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது

கொடிய கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த இலங்கைக்கு இலவசமாகக் கிடைத்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து கணக்காய்வு செய்ய,  இலங்கையின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று,  கணக்காய்வாளர் நாயகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்குள் அருகில் நங்கூரமிட்ட நிலையில் தீப்பற்றி எரிந்த  வணிகக் கப்பலில் இருந்து கடலில் கலக்கும் எண்ணெய் மற்றும் நச்சுகள் காரணமாக இலங்கை மீன்பிடி சமூகம் குறுகிய மற்றும் நீண்ட கால பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக மீனவர் சங்கங்களின் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஏற்பாடு பொலிஸ் நிலையத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் குருநாகலில் இடம்பெற்றுள்ளது. குருநாகல் நகரசபை முதல்வர் துஷாரா சஞ்சீவவின் பிறந்தநாள் கொண்டாட்டமே இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் கொண்டாடப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் அரசு தலைமைச் செயலாளர் அலாபன் பந்தோபாத்யாயவை மத்திய அரசுப் பணிக்காக விடுவிக்க வேண்டும் என்று இந்திய அரசு அழுத்தம் கொடுத்த விவகாரத்தில் புதிய திருப்பமாக, தமது அரசுப் பதவியில் இருந்து அந்த ஐஏஎஸ் உயரதிகாரி விலகியிருக்கிறார். மேலும், அவரை தமது தலைமை ஆலோசகராக நியமித்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.

பிரபல அழகு கலை நிபுணரான சந்திம ஜயசிங்க மற்றும் நடிகை பியூமி ஹன்சமாலி ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் பிரசன்னத்தால் சினமடைந்த இந்தியா யாழில் உள்ள தனது துணைத் தூதரகத்தின் பெயர்பலகையில் இருந்து இலங்கையின் மற்றுமொரு உத்தியோகபூர்வ மொழியான சிங்களத்தை நீக்கி தனது மொழியான இந்தியை புகுத்தியுள்ளது.

சீனாவில் பெற்றோர் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அரசு அனுமதித்துள்ளது.சீனாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதாக அண்மையில் ஆய்வு முடிவு வெளியானது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி