1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை வலிந்து எரியூட்டும் இலங்கை அரசின் கொள்கை கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை வலிந்து எரியூட்டும் இலங்கை அரசின் கொள்கை மனித உரிமைகளை மீறும் செயலாகும் என்று ஐ.நா எச்சரித்துள்ளது. ஒரு இனம் சார்ந்த கொள்கை நிலைப்பாடாக அதுவுள்ளது ஏற்புடையதல்ல என்கிறது ஐ.நா அறிக்கை.

இது தொடர்பில் கடுமையான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் வல்லுநர் குழு இலங்கை அரசு இஸ்லாமியர்கள் மற்றும் இதர சிறுபான்மையினரின் நம்பிக்கைகளுக்கு எதிராக கொவிட்-19 தொற்றால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதானது ஏற்கனவே நிலவும் காழ்ப்புணர்ச்சி, சகிப்புத்தன்மை இல்லாத சூழல் மற்றும் வன்முறையை அதிகரிக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளது.

அவ்வகையில் கொவிட்-19 தொற்றால் மரணமடைந்தவர்களின் சடலங்களை இனியும் இலங்கை அரசு வலிந்து எரியூட்டுவது தொடர முடியாது என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தார்கள் என்று உறுதியாகவோ அல்லது சந்தேகத்திற்கிடமான சடலங்களை எரிப்பது மட்டுமே அதைக் கையாள ஒரே வழியென்று கருதி செயல்படுவது மனித உரிமைகளை மீறும் செயலாகும். இலங்கையிலோ அல்லது வேறு நாடுகளிலோ அவ்வகையில் இறந்தவர்களின் உடல்களைப் புதைப்பதன் மூலம் தொற்று நோய் பரவும் ஆபத்து அதிகமுள்ளது என்று எவ்விதமான அறிவியல் அல்லது மருத்துவ ஆதாரங்களோ இல்லை என்று அந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி வரை கொவிட்-19 தொற்றால் இலங்கையில் 274 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அதில் முஸ்லிம்கள் குறிப்பிட்ட அளவிலுள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது. அவை அனைத்தும் அரசால் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம் எரியூட்டப்பட்டன என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையரின் அலுவலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களைப் புதைப்பதன் மூலம் நிலத்தடி குடிநீர் மாசுபடக் கூடும் என்று அரசின் தலைமை தொற்றுநோய் வல்லுநர் கூறியதை அடுத்து சடலங்களை அவசியம் எரியூட்டுவது எனும் முடிவை அரசு எடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் உலக சுகாதார அமைப்போ உடலை எரிக்கும் போது நோய்த் தொற்று பரவுவது தடுக்கப்படுகிறது என்று கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளது.

அதே போன்று இலங்கையின் பொதுச் சமூக மருத்துவ வல்லுநர்களும், இலங்கை மருத்துவர்கள் சங்கமும்கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களைப் புதைப்பது பொதுச் சுகாதாரக்கு கேடு ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை என்று கூறியுள்ளது. பொதுச் சுகாதாரத்திற்கு சவால் விடும் கொவிட்-19 தொற்று நோய் பரவல் குறித்து நாம் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்றாலும் உயிரிழந்தவர்களின் மாண்பை மதித்து இறந்தவர்களின் கண்ணியத்தை பேண வேண்டும், அவர்களது கலாச்சார மற்றும் மத சம்பிரதாயங்கள் அல்லது நம்பிக்கை ஆகியவை காக்கப்பட வேண்டும் என்று அந்த வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

காழ்ப்புணர்ச்சி, அதிதீவிர தேசியம் மற்றும் இனம் சார்ந்த முடிவு போன்றவற்றின் அடிப்படையில் பொது சுகாதாரம் குறித்த முடிவுகள் எடுக்கப்படுவதையும் அதை நடைமுறைப் படுத்துவதையும் நாங்கள் கண்டிக்கிறோம். அது நாட்டிலுள்ள முஸ்லிம்கள் மற்றும் இதர சிறுபான்மையினரை பழிவாங்கும் செயலாகும் என்று அந்த வல்லுநர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசின் அப்படியான செயல்பாடு ஏற்கனவே சிறுபான்மையினருக்கு எதிராக நிலவும் மனப்போக்கு, காழ்ப்புணர்ச்சி,இனமுறுகல் மற்றும் மத ரீதியாகச் சகிப்புத்தன்மை இல்லாதது ஆகியவற்றை மேலும் அதிகரித்து, அச்ச உணர்வை விதைத்து. நம்பிக்கையின்மையைத் தோற்றுவித்து மேலும் வெறுப்பையும் வன்முறையையும் ஊக்குவிக்கும் என்று அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அரசு இப்படியான கொள்கைகளை எடுப்பது ஏழைகள் மற்றும் பலவீனமானவர்கள் புறக்கணிக்கப்படுகிறோம் எனும் அச்சம் காரணமாக பொது மருத்துவ வசதிகளை அணுக முடியாத சூழலை ஏற்படுத்தக் கூடும் என்றும் தாங்கள் கவலைப்படுவதாகவும் அவர்கள் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர். இது அந்த தொற்று நோயைத் தடுப்பதில் பின்னடைவையும் ஏற்படுத்தக் கூடும் என்றும் அந்த வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

பல சந்தர்ப்பங்களில் தவறான பரிசோதனை முடிவு காரணமாகவும் இறந்தவர்களின் உடல்களை உறவினர்களின் அனுமதியின்றி எரியூட்டப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன என்று தமக்கு தகவல் கிடைத்துள்ளது என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அந்த வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களைப் புதைக்கும் உபாயங்களை ஆராயுமாறு நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதையும் தங்கள் கவனத்தில் எடுத்துள்ளதாக அந்த ஐந்து வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களைப் புதைப்பது அல்லது எரியூட்டுவது ஆகிய இரண்டு வழிகளையும் ஆராயுமாறு அரசால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழுக்கள் தெரிவித்தாலும் அது புறந்தள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது என்று அவ்வல்லுநர்கள் கூறுகின்றனர்.

எனவே கொவிட் தொற்றால் மரணமடைந்தவர்களை வலிந்து தகனம் செய்யும் நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று நாங்கள் இலங்கை அரசை காத்திரமாக வலியுறுத்துகிறோம். மேலும் அது தொடர்பில் தவறான தகவல் பரவுதல் மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்கள் ஆகியவற்றையும் தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கும்படி நாங்கள் கோருகிறோம் என்று அந்த ஐநா மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அந்த ஐவர் வல்லுநர் குழு ஆழமாகவும் உறுதியாகவும் கூறியுள்ளது.

இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில், சுதந்திர தின அணிவகுப்பு பயிற்சிக்கு பாடசாலை மாணவர்களை அழைப்பது தொடர்பில் நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ்த் தரப்பின் சார்பில் அனுப்பி வைத்துள்ள பொது ஆவணத்தில் தான் உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பம் இடுவது மறுக்கப்பட்டமையானது, அரசியல் அறத்தினை மீறும் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு 11 வருடங்கள் கடந்துள்ளன. இந்நிலையில், அந்த விடயத்தை முன்னிட்டு  www.ekneligodaforum.org  என்ற பெயரில் இணையதளம் ஒன்றை,  அறிமுகப்படுத்துவதற்கு "எக்னலிகொட மன்றம்" நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் தீவிரவாத, பயங்கரவாத சக்திகள் காணப்படுகின்ற வரையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீடிக்கவேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

“கிழக்கு முனைய விவகாரத்திலும் சரி, இந்தியாவின் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களிலும் சரி, சீனா ஆதிக்கம் செலுத்த முனைவதாகவும், அவற்றைத் தடுக்கவோ, தாமதப்படுத்தவோ முற்படுவதாகவும், இந்தியா கருதுகிறது”

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று 24.01.2021 காலை விஜேராமவில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு தான் கொரோனா பாணியை வழங்கிய நிலையில்,அவர் அதனை உரியமுறையில் பருகினாரா என்பது குறித்து தனக்கு தெரியாதென கேகாலை தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அமைத்துள்ள உள்ளக விசாரணைக் குழுவைக் கண்டு பன்னாட்டு அரசுகள் ஏமாறக் கூடாது என்று ஹ்யூமன் ரைட்ச் வாட்ச் (மனித உரிமைகள் கண்காணிப்பகம்) அமைப்பு எச்சரித்துளள்து.

மனித உரிமைகள் விஷயத்தில் இலங்கை அரசின் மோசமான நிலைப்பாடு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் தீவிர கவனத்தில் உள்ள நிலையில், இந்த உள்நாட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அந்த அமைப்பின் தெற்காசிய இயக்குநர் மீனாக்ஷி கங்குலி தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் விஷயத்தில் இலங்கை அரசின் மோசமான நிலைப்பாடு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் தீவிர கவனத்தில் உள்ள நிலையில், இந்த உள்நாட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அந்த அமைப்பின் தெற்காசிய இயக்குநர் மீனாக்ஷி கங்குலி தெரிவித்துள்ளார்.

பன்னாட்டு விசாரணையை உடனடியாக தவிர்க்கும் நோக்கிலேயே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான அழுத்தங்கள் ஏற்படும் போதெல்லாம் இப்படியான விசாரணைக் குழுக்களை அமைப்பது இலங்கைக்கு வாடிக்கையாகவுள்ளது
அவ்வகையில் நீண்ட காலம் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது இலங்கையில் குறைந்தது ஒரு டஜன் உள்ளக விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன, ஆனால் ஒன்றின் மூலமும் யாரும் நீதியின் முன்னிறுத்தப்படவில்லை அல்லது காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க அவர்களின் குடும்பங்களுக்கு உதவவில்லை என்று அவரது அறிக்கை கூறுகிறது.

இலங்கை அரசால் அமைக்கப்பட்ட உள்நாட்டு விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் பெரும்பாலும் வெளியிடப்படவில்லை, மேலும் அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் அமல்படுத்தப்படவுமில்லை என்கிறார் மீனாக்ஷி கங்குலி.

சர்வதேசப் பார்வையாளர்கள் மற்றும் ஐநா வல்லுநர்களால் இலங்கையின் சட்ட வழிமுறை கட்டமைப்புகளில் ஆழமான பிரச்சனைகள் உள்ளன என்பது தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2012ல் ஐ நா மனித உரிமைகள் கவுன்சில் தான் முன்னர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இயற்றிய தீர்மானத்தில் கூறப்பட்டிருந்த பரிந்துரைகளை நிறைவேற்றும்படி இலங்கை அரசைக் கோரியது. ஆனால் அது நடைபெறாத நிலையில், போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் தேவை என்பது உணரப்பட்டது என்று தனது அறிக்கையில் அவர் கூறுகிறார்.

அதே போல் 2015ல் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் ஏகமனதான தீர்மானமொன்றில் இலங்கை இணைந்து உண்மை, நீதி, இழப்பீடு குறித்து ஆராயவும் மற்றும் அது போன்ற குற்றங்கள் மீண்டும் இடம்பெறாது என்பதையும் உறுதியளித்தது.

அதேவேளை பொறுப்புக் கூறல் தொடர்பில் பன்னாட்டு நீதிபதிகள், குற்றஞ்சாட்டும் வழக்கறிஞர்கள், விசாரணையாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் சட்டத்தரணி ஆகியோரை உள்வாங்கவும் இலங்கை உடன்பட்டது.

அந்த வழிமுறை மந்தமாக முன்னேறினாலும் அதனால் ஊக்கமடைந்த ஐ நா மனித உரிமைகள் கவுன்சில் அதற்கான காலகட்டத்தை நீட்டித்தது என்றாலும் நவம்பர் 2019ல் ஜனாதிபதியாக பதவியேற்ற கோத்தாபய ராஜபக்ஷ இலங்கையை அந்தத் தீர்மானத்திலிருந்து விலக்கிக் கொண்டு அதனால் ஏற்பட்ட முன்னேற்றத்தையும் ஒழித்துக் கட்டினார் என்று தனது அறிக்கையில் மீனாக்ஷி கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி 2005-2015 காலப் பகுதியில் பாதுகாப்புச் செயலராக இருந்த போது மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என்றும், அவர் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை முக்கியமான மூத்த பொறுப்புகளில் நியமித்துள்ளார், பொதுமக்களைக் கொலை செய்த சில இராணுவ வீரர்களுக்கு அவர் மன்னிப்பும் வழங்கியுள்ளார் என்பதையும் கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் மீண்டும் அச்ச சூழல் திரும்பியுள்ளது என்று கூறும் அவரது அறிக்கை, முன்னர் நடைபெற்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட செயற்பாட்டாளர்கள், செய்தியாளர்கள், சட்டத்தரணிகள் மட்டுமின்றி பொலிஸ் விசாரணைகளை நடத்தியவர்களும் மௌனமாக்கப்பட்டனர் என்று மேலும் தெரிவித்துள்ளது.

பலவீனமாகவுள்ள சிறுபான்மையினரை அச்சுறுத்தி அவர்கள் மீதான தாக்குதலை ராஜபக்ஷகளின் அரசு முன்னெடுத்து வருகிறது என்பதற்கு சமீபத்திய சான்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டதாகும் என்று சாடுகிறார் கங்குலி. இலங்கையில் எச்சரிக்கை மணிகள் தெளிவாக ஒலிக்கின்றன.

எனவே ஐ நா மனித உரிமைகள் கவுசில் புதிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டியது மிகவும் அவசியம். அதன் மூலம் எதிர்காலத்தில் குற்றஞ்சாட்டி வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது அதற்கு தேவைப்படும் ஆதாரங்களைச் சேகரித்து அதைப் பாதுகாப்பது, அரசைத் தொடர்ந்து கண்காணிப்பது ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும்.

எனவே உறுப்பு நாடுகள் இலங்கை அரசு தற்போது அளித்துள்ள போலி வாக்குறுதிகளால் ஏமாறாமல் இருக்க வேண்டும், மற்றும் அண்மையில் அங்கு நடைபெற்றும் வரும் விஷயங்களை கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் ஹ்யூமன் ரைட்ஸ் வாட்சின் அறிக்கையில் அதன் தெற்காசியப் பகுதிக்காக இயக்குநர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார்..

காணாமற்போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தின் ஆணையாளர்களின் பதவிக்காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நிறைவடையவுள்ளது.இந்த அலுவலகத்தில் ஏழு ஆணையாளர்கள் உள்ளனர்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி