1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகமாக செயற்படும் தமது குடும்ப வீட்டினை மீள ஒப்படைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளதாக மக்கள் முன்னேற்றக்கட்சியின் செயலாளர் நாயகம் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் நீதிவான் இந்த உத்தரவினை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காணொளி தொழில்நுட்பம் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் வழக்கு குறித்த நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தமது வழக்கு விசாரணையை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி, தமிழ் அரசியல் கைதி ஒருவர் முன்னெடுத்த உண்ணாவிரதம் 10 நாட்களின் பின்னர் இடைநிறுத்தப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரிடம், காட்டு யானை பிரச்சினைக்கு தீர்வு காணக் கோரி தென்னிலங்கை விவசாயிகள் குழு ஒன்று தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

யாழ்ப்பாணம் – புத்தூர், நவகிரியில் நிலாவரைக் கிணறு அமைந்துள்ள பகுதியில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் இன்று முறுகல் நிலை ஏற்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக மரணிப்போரை தகனம் செய்ய மாத்திரம் அனுமதிக்கும் வர்த்தமானியை மாற்றுமாறு அரசாங்கத்தை கோருவதாக பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார் .

இலங்கையில் நடைபெற்ற போரிலிருந்து தப்பித்து தமிழகம் சென்ற அகதியொருவர் கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். கடற்படையினர் கடந்த திங்கட்கிழமை இரவு தமிழக மீனவர்கள் மீது நடத்திய தாக்குதலில் அந்தப் படகு மூழ்கடிக்கப்பட்டு அதிலிருந்த நால்வரும் படுகொலை செய்யப்பட்னர். அதில் நீண்ட காலமாக மண்டபம் பகுதியிலுள்ள அகதிகள் முகாமிலிருந்த சாம் நேசபெருமாளும் அடங்குவார்.

சீஷெல்ஸ் உயர்ஸ்தானிகராக குடும்ப உறுப்பினர் நியமிக்கப்பட்டது மற்றொரு கறுப்புப் பண வியாபாரத்திற்காகவா!

அ.தி.மு.க-வில் இப்போது மூணு சீட்டு விவகாரம் மிகப் பிரபலம்! அமைச்சர்கள் பலரும் கோயில் கோயிலாகச் சென்று சுவாமி முன்பாக மூன்று சீட்டுகளைக் குலுக்கிப் போட்டு எடுத்து வருகிறார்களாம். சனிப்பெயர்ச்சிக்கே ஜோதிடம், பரிகாரம் என்று ரணகளப்படுத்திவிடுபவர்கள், ‘சசிப்பெயர்ச்சி’க்கு சும்மா இருப்பார்களா? சசிகலா, எடப்பாடி, பன்னீர் ஆகியோரின் பெயர்களை எழுதிப் போட்டு யார் பக்கம் செல்வது என்று குறி கேட்டுவருகிறார்கள்! இன்னொரு பக்கம்… சசிகலாவின் நிபந்தனைகள், தினகரனின் சீக்ரெட் விசிட், முதல்வர் பழனிசாமியின் டெல்லி பயணம் ஆகியவற்றை மையப்படுத்தி அரசியல் சதுரங்கத்தில் வேக வேகமாக நகர்த்தப்படுகின்றன காய்கள்.

விசேட தேவையுடைய ஒரு குழு சார்பாக ஒரு தசாப்தத்திற்கு முன்னர் முதலாவது ராஜபக்ச ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்த இரண்டாவது ராஜபக்ச ஆட்சி தீர்மானித்துள்ளது.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி