1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தடுத்து வைக்கப்பட்டுள்ள  முன்னாள் ஆளுனர் அசாத் சாலி விவகாரத்தில் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் திரிபு படுத்தப்பட்ட ஆதாரங்களை வைத்துக் கொண்டு தவறாக செயற்பட்டிருப்பதாக கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் புத்திக சி. ராகல காட்டம் வெளியிட்டுள்ளர் .

மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு, எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெற இருப்பதாக கூறி, அந்நிகழ்விற்கு தடை உத்தரவை பிறப்பிக்குமாறு மன்னார் நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்த நிலையில் நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

தேசிய ரூபவாஹினியானது ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் சமத்துவத்தையும், ஒற்றுமையையும் வளர்க்கும் விதமாக செயற்படுவதற்குப் பதிலாக, துவேசத்தையும், வெறுப்பையும் வளர்க்கக் கூடிய கருத்துக்களை ஒலிபரப்புவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இலங்கையில் ஒரு சமூக மாற்றத்திற்கான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்ல சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, உறுதியளித்துள்ளார். 

ஆசிரியர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமையால் சமூக வலைத்தளங்கள் ஊடாக தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட சங்கத்தின் செயலாளருமான பொன்னுதுரை விஜயரூபன் கூறுகிறார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் வருடத்தில் குறைந்தளவு பங்களிப்பை வழங்கிய பத்து மக்கள் பிரதிநிதிகளில் பாதி பேர் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கெரவலபிட்டிய. யுதகனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கும் தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லையென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் கோவிட் மற்றும் நிமோனியா காரணமாக 31 வயது மருத்துவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த மருத்துவர் இரத்மலானை – யட்டோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த தரிந்தி தில்ஷிகா என்பவர் என தெரிவிக்கப்படுகின்றது.

லொஹான் ரத்வத்த சிறைச்சாலைக்குள் நுழைந்து சண்டித்தனமாக நடந்துக் கொண்டமை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதியரசரான குசலா சரோஜினி நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழில் நினைவிடத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்காத நிலையில், நினைவிடத்துக்கு முன்பாக தான் நின்ற இடத்திலேயே சுடரேற்றிய போது அங்கு இருந்த பொலிஸார் அதனை தட்டி அணைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி