1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கடந்த 7 நாட்களில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 20000க்கும் மேல் நாட்டின் சகல மாவட்டங்களிலிருந்தும் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சுமார் 10000 பேர் கொழும்பு மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளனர்.கொவிட் செயலணியின் உத்தியோக புள்ளிவிவரங்களின்படி மே மாதம் 17ம் திகதி காலை 7.00 மணியிலிருந்து 24ம் திகதி காலை 6.00 மணிவரை கண்டறிய்ப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 21455.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதுர்தீன் ஆகியோர் சிஐடி யால் கைது செய்யப்பட்டு இன்றுடன் (மே 24) ஒரு மாதமாகின்றது.

பல நெருக்கடிகளுக்கு இடையே தாயகத்திலுள்ள தமிழர்கள் இயன்றளவில் தமது வீடுகளிலும் ஆலயங்களிலும் இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த தமது உறவுகளுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

கொழும்பில் தெருப்போராட்டம் என்பது தமக்கு பழக்கமானதென்றும் இன்று அத்தகைய போராட்டம் ஒன்றை,  மொழிப்போராட்டமாக, கொழும்பு மாநகரில் துறைமுக நகருக்கு உள்ளேயே வந்து நடத்தும் நிலைமைக்கு தள்ளிவிட வேண்டாம் என சீன, இலங்கை அரசாங்கங்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான 'யாஸ்' புயல், தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு வங்கம் அருகே நாளை மறுதினம் கரையை கடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

குண்டொன்று இருப்பதாக போலியான தகவல்களை கொடுத்து, எச்சரித்து தனது நாட்டுக்கு மேலாக, உயரமான வான் பரப்பில் பறந்துகொண்டிருந்த  பயணிகள் விமானத்தை பலவந்தமாக தரையிறக்கி, அதிலிருந்த ஊடகவியலா​ளரை கைது செய்யும் நடவடிக்கையை பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ நேற்று (23) முன்னெடுத்திருந்தார்

வாகன இறக்குமதிக்கு நாட்டில் இடைக்கால தடை விதித்த போதிலும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வந்த பிசிஆர் சோதனைகள் நேற்று முதல் முடங்கியுள்ளன.

நாளை முதல் தமிழகத்தில் ஒருவாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது.கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாகபரவிவரும் நிலையில், நாளை முதல் ஒருவாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்று  நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் அவரது மனைவியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல்நலக்குறைவு என்ற சந்தேகத்தின் பேரில் இருவரும் நேற்று (22) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பி.ஆர்.சி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.இன்று காலை கிடைக்கப்பெற்ற மருத்துவ அறிக்கையின்படி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நாட்டு மக்களுக்கு கொவிட் நோய்க்கு எதிராக 30 மில்லியன் தடுப்பூசிகள் தேவை, இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை இறக்குமதி செய்வது கடினம்.

சுகாதார அமைச்சின் வேண்டுகோளின் பேரில் ஜூன் 07 ம் தகதி வரை பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதில் கொவிட் செயற்குழு கவனம் செலுத்துவதாக பல அரசு சார்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்னும் இரண்டு வாரங்களுக்கு நாட்டை மூடுமாறு சில மருத்துவ சங்கங்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரித்துள்ளன. இதுபற்றி கொரோனா தொடர்பான ஜனாதிபதி செயற்குழுவிடம் ஏன் விவாதிக்கவில்லை என்பது புதிராக உள்ளது என்று கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயல் மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு பயண அனுமதி வழங்கப்பட்டபோதும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினரின் ஊடகவியலாளர்கள் மீதான கெடுபிடிகள் அதிகரித்துள்ளது.

தனிநபர் வருமானத்தில் இந்தியாவை வங்காளதேசம் பின்னுக்கு தள்ளியுள்ளது.இந்தியாவின் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு கரணமாக பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதித்தது. பெருந்தொற்று காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் எதிர்மறையில் இருந்தது. ஆனால், இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான  வங்கதேசத்தின் வளர்ச்சி குறைந்தாலும் எதிர்மறையில் செல்லவில்லை.  இதன் பலனாக தனிநபர் வருமானத்தில் இந்தியாவை வங்காளதேசம் விஞ்சியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி