1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இடைக்கால அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்ட வேண்டுமாயின் அது என் தலைமையிலேயே ஸ்தாபிக்கப்படும். பிறிதொரு தரப்பினரை பிரதமராக்க பெரும்பாலான எம்.பிக்கள் தயாரில்லை.

நாட்டின் உள்ளே பாரிய மக்கள் போராட்டம் ஒன்று ஏற்பட்டு இருக்கின்றது. அதனை யாரும் மறுக்க முடியாத அளவு எழுச்சி பெற்ற இளைஞர் போராட்டமாகும்.


காலி முகத்திடலுக்கு சென்று உணவு உட்கொள்ள மக்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வு காணாவிடின் நாமும் உணவுக்காக காலி முகத்திடலுக்கு சென்று நேரிடும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையில் தெரிவித்தார்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அப்பாவி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் பதவி விலகுமாறு முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் கோரியுள்ளார்.

அரசிலிருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்பட்டு வரும் எம்.பிக்கள் குழுவின் 41 உறுப்பினர்கள் அரசியலமைப்பு 21ஆவது திருத்தம் தொடர்பான யோசனைகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று கையளித்துள்ளனர்.

இரண்டாவது ராஜபக்சக்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், இது தொடர்பான செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகவியலாளர்களை பொலிஸார் கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர்.


கட்சி சார்பற்ற மக்கள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் நேற்று (ஏப்ரல் 21) பிற்பகல் விஹார மகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரக போராட்டத்தில் பல அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.

இறையாண்மையின் மூலம் ஜனாதிபதியை பதவி விலகச் செய்ய வேண்டும் என்பதந்காக அவரை பதவி நீக்கும் மனுவில் கையெழுத்து சேகரிக்கும் பிரச்சார நடவடிக்கை மக்கள் போராட்ட களத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இலங்கையிலிருந்து நான்கு மாத கர்ப்பிணி, ஒன்றரை வயது குழந்தை உட்பட நான்கு குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 18 பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்னனர்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையை நினைவுகூர்ந்தும், உயிரிழந்தவர்களுக்கு நீதிவேண்டியும் இன்று நாட்டின் பல தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டன.


ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடலில் கடந்த 12 தினங்களாக தொடர் போராட்ட இடம்பெற்று வரும் நிலையில், குறித்த போராட்டத்தில் ஆதரவு தெரிவித்த பொலிஸ் சார்ஜன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு இல்லையெனில் பௌத்த சங்க சாசனத்தை அமுல் செய்வோம் எனவும் மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 மகிந்த ராஜபக்ஷ பதவி விலகினால் புதிய பிரதமரின் கீழ் அமைச்சரவையில் இணைந்து கொள்ளத் தயார் என பல சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக அரசாங்க உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு அன்று, பல அப்பாவிகளின் உயிரைப் பறித்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் மூன்று வருடங்கள் ஆகின்றது.


இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலையில், அதனை சமாளிக்க மக்கள் அன்றாடம் பல சவால்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி