1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மறைந்த மங்கள சமரவீரவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நேற்று (26) கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையில் மத வழிபாடுகள் நடைபெற்றன.

மொத்த வியாபாரிகள் சீனி விலையை அதிகரித்தது அநீதியாகுமெனவும், ஒரு கிலோ சீனியிலிருந்து அவர்கள் 100 ரூபாய் இலாபம் பெறுவதாகவும் நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன கூறுகிறார்.

இலங்கைக்கு அதிக வெளிநாட்டு வருமானத்தைப் பெற்றுத்தரும் வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து இந்த வருடம் ஜுலை மாதத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட  வெளிநாட்டு வருமானம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அரசாங்கம் அர்த்தமில்லாமல் நாட்டை முடக்கியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சமூகத்தின் தலைவர் மருத்துவர் ருஷான் பெல்லன கூறுகிறார். மக்களின் நடமாட்டத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தி ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியிருந்தாலும், அப்படி நடக்கவில்லையெனவும் அவர் கூறுகிறார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்திருக்கும் நபர்கள் சம்பந்தமாக விசாரணை செய்தல், விடுதலை செய்தல், பிணை வழங்குதல் உட்பட மேற்கொண்டு தீர்மானித்தல் சம்பந்தமாக ஜனாதிபதியின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் ஆலோசனைச் சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் காலமான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கையின் மிகச்சிறந்த ஜனாதிபதியாக வரலாற்றில் இடம்பிடிக்க முடியும் என்று ஒருமுறை கூறினார்.

இலங்கையில் ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 210 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி மடகாஸ்கர் உலகின் முதல் "பருவநிலை மாற்றப் பஞ்சத்தை" எதிர்கொள்ளும் விளிம்பில் உள்ளது. நான்கு ஆண்டுகளாக மழையின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் மோசமான பசி பட்டினியாலும், உணவுப் பாதுகாப்பின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மங்கள சமரவீரவை பலரும் விரும்பினர். ஆனால் ஒருசிலர் அவரை விரும்பவில்லை. அவரது தாராளவாத பார்வையில் உடன்படாத பலர் இருந்தனர் ஆனால் அவர்களை மிரட்டாமல் உரையாடலை ஏற்றுக்கொண்டனர். அவர் தனது உலகக்கண்ணோட்டத்தை ஆணையிட பிரபலமான கோரிக்கைகளைஅனுமதித்தவர்அல்ல. மாறாக, சமூக விதிமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதை அவர் கேள்விஎழுப்பினார்.

சுகாதார அமைச்சின் செயலாளரின் உத்தரவுகளை நிறைவேற்றுவதை உடனடியாக நிறுத்துமாறு சுகாதார சேவையின் சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் புதிய சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை முடக்கப்பட்டுள்ள போதிலும், பாதுகாப்பு செயலாளர் உட்பட ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிகள் குழு, துருக்கியில் இடம்பெறும் ஆயுத விற்பனைக்கான கண்காட்சியில் பங்கேற்றுள்ளது.

இலங்கையில் அரச நிறுவனங்களுக்கு சொந்தமாக 82,000ற்கும் மேற்பட்ட வாகனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
பொருளாதார கொள்கை மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சராக, பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைச்சுக்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள், அரச வணிக நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிடம் 82,194 வாகனங்கள் இருப்பதாக அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

களுபோவில வைத்தியசாலையின் வார்டுகளில் கொவிட் வைரஸால் இற்தவர்களின் உடல்களைக் காட்டும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ஒருவர் 23ம் திகதி பொலிஸ் துறையின் கணினி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் போலியானவையென பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த இருண்ட காலத்தில் நீங்கள் வாழ்க்கைப் போரில் தோற்றீர்கள்.உங்களை வாழ வைக்க உங்கள் உறவினர்களும் நண்பர்களும் உங்களுக்காக சண்டையிட்டனர். கண்ணீர் வந்தது. அந்த நம்பிக்கையையும் இழந்தோம்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி